ப்ரெட் பாயசம் செய்யலாம்

ப்ரெட் பாயசம்
தேவையானவை

ப்ரெட் – 5 எண்ணிக்கை
சர்க்கரை – தேவைக்கேற்ப
முந்திரி பருப்பு – 5 எண்ணிக்கை
ஏலக்காய் – 1 டீஸ்பூன்
பால் – 4 டம்ளர்
குங்குமப்பூ – சிறிதளவு (தேவைப்பட்டால்)
நெய் – 4 டீஸ்பூன்

செய்முறை

முதலி ப்ரெட் ஐ சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். கிடாயில் நெய்யினை ஊற்றி நறுக்கிய ப்ரெட் சேர்த்து வறுக்கவும். பின் அதனை எடுத்து மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த பொடியும் சர்க்கரையும் சம அளவு எடுத்துகொண்டு, அதில் பாதி அளவு பாலையும் சேர்த்து கொதிக்க வையுங்கள்.

Amazon: Laptops Year end deals

சிறிது கெட்டியாக மாறும், மாறும்பொழுது அதில் கொஞ்சம் கொஞ்சமாக மீத பால் சேருங்கள். கடைசியாக ஏலக்காய் பொடியும், நெய்யில் வதக்கிய முந்திரியையும் சேர்த்து இறக்குங்கள். இதன்மேல் குங்குமப்பூவை தூவி பருகுங்கள். சுவை இனிமையாக இருக்கும்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெஜிடபிள் போண்டா செய்முறை
அப்பளம் வத்த குழம்பு