தமிழ் இலக்கணம் புணரியல் பகுதி 5

தமிழ் இலக்கணம்
லகர ளகர வீற்றுப் புணர்ச்சி
1. லகர ளகரங்களில் முன் வல்லினம் வரின், வேற்றுமையிலும் அல்வழியிலே பண்புத் தொகையிலும், உவமைத் தொகையிலும், இறுதி லகரம் றகரமாகவும் ளகரம் டகரமாகவுந் திரியும். எழுவாய்த் தொடரினுலும் உம்மைத் தொகையிலுந் திரியாதியல்பாம்.

உதாரணம்.

பாற்குடம் அருட்பெருமை – வேற்றுமை
வேற்படை அருட்செல்வம் – பண்புத்தொகை
வேற்கண் வாட்கண் – உவமைத் தொகை
குயில்கரிது பொருள் பெரிது – எழுவாய்
கால்கை பொருள்புகழ் – உம்மைத்தொகை

Amazon Year end offer Mobiles

பால் குடித்தான், அருள்பெற்றான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், கால்குதித்தோடினான், வால்போழ்ந்திட்டான் என மூன்றாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாயவிடத்து திரியாவெனக்கொள்க.

2. தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த ல ள க்கள், வல்லினம் வரின், எழுவாய்த் தொடரிலும், உம்மைதொகையிலும், ஒரு கால் இயல்பாகவும், ஒரு காற்திரியவும் பெறும்.

உதாரணம்.

கல் குறிது
முள் சிறிது கற்குறிது
முட்சிறிது எழுவாய்
அல் பகல்
உள் புறம் அட்பகல்
உட்புறம் உண்மைத்தொகை

Amazon Year end offer Laptops

நொல், செல், கொள், சொல் இந்நான்கீற்றின் லகரவொற்று, நெற்கடிது, செற்கடிது, கெற்சிறிது, சொற்பெரிது என எழுவாய்த்தெர்டரிலும் உறழாது திரிதே வரும்.

செல் – மேகம், கொல் – கொல்லன்

உறழ்ச்சியாவது ஒரு கால் இயல்பாகியும், ஒரு கால் விகாரப்பட்டும் வருதல். உறாழ்ச்சி எனினும், விகற்ப்ப வினுமெனினும் ஓங்கும்.

கற்கரித்தான், கட்குடித்தான் எனத்தனிக் கூற்றெழுத்தை சார்ந்h ல ள க்கள், இரண்டாம் வேற்றுமைத் தொகையின் வருமொழி வினையாயவிடத்தும், இயல்பாகாது. திரிந்தே நிற்கும்.

3. அல்வழி வேற்றுமை இரண்டினும் லகரத்தின் முன் வருந் தகரம் றகரமாகவும், ளகரத்தின் முன் வருந் தகரம் டகரமாகவுந் திரியும்.

உதாரணம்.

அலவழி வேற்றுமை
கற்றீது கற்றீமை

4. தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த ல ள க்கள், அல் வழியில், வருந் தகரந் திரிந்த விடத்து, றகர டகரங்களாகந் திரிதல்லன்றி, ஆய்தமாகவுந் திரியும்.

உதாரணம்.

கற்றீது கஃறீது
முட்டீது முஃடீது

5. தனிக்குற்றெழுத்தைச் சாராத ல ளக்கள், வருந் தகரந் திரிந்த விடத்து அல்வழியில், எழுவாய்த் தொடரிலும், விழித்தொடரிலும், உண்மைத் தொகையிலும், வினைமுற்றுத் தொடரிலும், வினைத்தொகையிலும் கெடும்.

உதாரணம்.

வேறீது வாடீது
தோன்றறீயன் வேடீயன் எழுவாய்த் தொடர்
தோன்றாறொடராய் வேடீயை – விளித்தொடர்
காறலை தாடலை – உம்மைத்தொகை
உண்பறமியேன் வந்தாடேவி – வினைமுற்றுத் தொடர்
பயிறோகை அருடேவன் – வினைத்தொகை

குயிற்றிரள், அருட்டிறம் என வேற்றுமையிலும், காற்றுணை, தாட்டுணை எனப் பண்புத்தொகையிலும் பிறங்கற்றோள், வாட்டாரை என உவமைத் தொகையிலும், கெடாது திரிந்து நின்றமை காண்க. பிறங்கள் – மலை, தாரை – கண்

வேறொட்டான், தாடொழுதான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையின் வருமொழி வினையாயவிடத்துக் கெடுமெனக் கொள்க.

நிலைமொழி உயர்திணைப் பெயராயின், தோன்றறாள், வேடோள் என வேற்றுமையினுங் கெடும் எனவும், குரிசிற்றடிந்தான், அவட்டொடர்ந்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையின் வருமொழி வினையாய விடத்துக் கெடாது திரியும் எனவுங் கொள்க.

6. லகர ளகரங்களின் முன் மெல்லினம் வரின், இருவழியினும், லகரம் னகரமாகவும், ளகரம் ணகரமாகவுந் திரியும். வரு நகரம் லகரத்தின் முன் னகரமாகவும், ளகரத்தின் முன் ணகரமாகவுந் திரியும்.

உதாரணம்.

அல்வழி வேற்றுமை
கல் – கன்ஞெரிந்தது கன்ஞெரி
வில் – வின்னீண்டது வின்னீட்சி
புல் – புன்டாண்டது புன்மாட்சி
முள் – முன்ஞெரிந்நது முண்ஞெரி
புள் – புண்ணீண்டது புண்ணீட்சி
கள் – கண்மாண்டது கண்மாட்சி

7. தனிக்குற்றெழுத்தைச் சாராத ல ளக்கள், இரு வழியிலும், வரு நகரந் திரிந்த விடத்துக் கெடும்.

உதாரணம்.

அல்வழி வேற்றுமை
வேனன்று வேனன்மை
பொருணன்று பொருணன்மை

8. லகர ளகரங்களின் முன் இடையினம் வரின், இரு வழியினும், இறுதி ல ளக்கள் இயல்பாம்

உதாரணம்.

அல்வழி வேற்றுமை
கல்யாது கலயாப்பு
விரல்வலிது விரல்வன்மை
முள்யாது முள்யாப்பு

வகரவீற்றுப் புணர்ச்சி

9. அவ், இவ், உவ் என்னும் அஃறிணைப் பலவின் பாலை உணர்த்தி வரும் சுட்டுப் பெயர்களின் ஈற்று வகரம், அல்வழியில், வல்லினம் வரின் ஆயுதமாகத் திரியும்: மெல்லினம் வரின் வந்த எழுத்தாகத் திரியும்: இடையினம் வரின் இயல்பாகும்.

உதாரணம்.

அஃகடியன இஃசிறியன உஃபெரியன
அஞ்ஞான்றன இந்நீண்டன உம்மாண்டன
அவ்யாத்தன இவ்வளைந்தன உவ்வாழ்ந்தன

10. தெவ் என்னும் சொல்லீற்று வகரம், யகரமல்லாத மெய்கள் வரின், உகரச்சாரியை பெறும்: மகரம் வருமிடத்து, ஒரோவழி மகரமாகத் திரியவும் பெறும்.

உதாரணம்.

அல்வழி வேற்றுமை
தெவ்வுக் கடிது தெவ்வுக்கடுமை
தெவ்வுமாண்டது தெவ்வுமாட்சி
தெவ்வுவந்தது தெவ்வுவன்மை
தெவ்வுமன்னர் தெவ்வுமுனை
தெம்மன்னர் தெம்முனை

எண்ணுப்பெயர் நிறைப்பெயர் அளவுப் பெயர்கள் சாரியை பெறுதல்
11. உயிரையும் மெய்யையும் ஈறாகவுடைய எண்ணும் பெயர் நிறைப்பெயர் அளவுப்பெயர்களின் முன் அவ்வவற்றிற் குறைந்த அவ்வப்பெயர்கள் வரின், பெரும்பாலும் ஏ என்னுஞ் சாரியை இடையில் வரும்.

உதாரணம்.

ஒன்றேகால் காலேகாணி
தொடியேகஃக கழஞ்சேகுன்றி
கலனேபதக்கு உழக்கேயாழாக்கு
ஒன்றரை, கழஞ்சரை, குறுணிநானாழி எனச் சிறுபான்மை ஏகாரச் சாரியை வராதொழியுமெனக் கொள்க.

இடைச் சொற்களின் முன் வல்லினம் புணர்தல்
12. உயிரீற்றிடைச் சொற்களின் முன் வரும் வல்லினம் இயல்பாயும் மிக்கும் முடியும்.

உதாரணம்.

அம்ம – அம்மகொற்றா
அம்மா – அம்மாசாத்தா
மியா – கேண்மியாபூதா
மதி – னெ;மதிபெரும
என – பொள்ளெனப்புறம்வேரார்
இனி – இனிச்செய்வேன்
ஏ – அவனே கண்டான்
ஒ – அவனோ போனான்

13. வினையை அடுத்த படி என்னும் இடைச் சொல்லின் முன் வரும் வல்லினம் மிகா. சுட்டையும் வினாவையும் அடுத்த படி என்னும் இடைச் nசொல்லின் முன் வரும் வல்லினம் ஒரு கால் மிக்கும், ஒரு கால் மிகாதும், வரும்.

உதாரணம்.

வரும்படி சொன்னான்
அப்படிசெய்தான் அப்படிச்செய்தான்
எப்படிபேசினான் எப்படிப்பேசினான்

14. வேற்றுமைப் பொருட்புணர்ச்சியில் வல்லினம் வரின், சாரியை இடைச்சொல்லின் இறுதி னகரந் திரியாதியல்பாம்.

உதாரணம்.

ஆன்கூற்று வண்டின்கால்

உரிச்சொற்களின் முன் வல்லினம் புணர்தல்
15. உயிரீற்றுச் சொற்களின் முன் வல்லினம் வரின், மிக்கும், இயல்பாகியும், இனமெல்லெழுத்து மிக்கும் புணரும்.

உதாரணம்.

தவ – தவப்பெரியான்
குழ – குழக்கன்று
கடி – கடிக்கமலம்
கடி – கடிகா
தட – தடக்கை
கம – கமஞ்சூல்
நனி – நனிபேதை
கழி – கழிகண்ணோட்டம்

16. வேற்றுமையுருபுகள், நிலைமொழியோடும் வருமொழியோடும் புணருமிடத்து, அவ்வுருபின் பொருட்புணர்ச்சிக்கு முற் கூறிய விதிகளைப் பெரும்பான்மை பெறும்: சிறுபான்மை வேறுபட்டும் வரும்.

உதாரணம்.

நம்பிக்கண் வாழ்வு: இங்கே உயர்திணைப் பெயாPற்று உயிர்முன் வேற்றுமைப் பொருளில் வரும் வல்லினமிகா, என்றும், ணகரம் இடையினம் வரின் இறுவழியினும் இயல்பாம், என்றும், விதித்தபடியே, கண்ணுருபின் முதலுமீறும் இயல்பாயின.

உறிக்கட்டயிர்: இங்கே இகரவீற்றஃறிணைப் பெயர்முன் வேற்றுமைப் பொருளில் வரும் வல்லினம் மிகும் என்றும், ணகரம் வேற்றுமைப் பொருளில் வல்லினம் வரின், டகரமாகத் திரியும் என்றும், விதித்தபடியே, கண்ணுருபின் முதலுமீறும் விகாரமாயின.

நம்பிக்குப் பிள்ளை: இங்கே உயர்திணைப் பெயாPற்று உயிர் முன் வேற்றுமை பொருளில் வரும் வல்லினம் இயல்பாம் என்று விதித்தபடி இயல்பாகாது குவ்வுருபு மிகுந்தது.

இங்ஙனம் உருபு புணர்ச்சியானது பொருட்புணர்ச்சியை ஒத்து வருதலும், அதின் வேறுபட்டு வருதலும், அதின் வேறுபட்டு வருதலும், சான்றோராட்சியால் அறிந்து கொள்க.

உறித்தயிர் என்பது, கண்ணென்னும் ஏழாம் வேற்றுமையுருபின்றி அவ்வுருபினது இடப்பொருள் படப்பெயரும் நிலைமொழி வருமொழிகளாய் நின்று புணர்ந்த புணர்ச்சி யாதலின், பொருட்புணர்ச்சியெனப்பட்டது.

உறிக்கட்டயிர் என்பது, அவ்வேழனுருபு வெளிப்படட்டு நின்று நிலைமொழி வருமொழிகளோடு புணர்ந்த புணர்ச்சியாதலின், உருபு புணர்ச்சியெனப்பட்டது.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2018
குதிரைக் கொம்பு - பாரதியார்