தமிழ் இலக்கணம் புணரியல் பகுதி 3

தமிழ் இலக்கணம்

தமிழ் இலக்கணம் புணரியல் பகுதி 3

1. இய, இயர், Nமு, டை என்னும் விகுதிகளையுடைய வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் மிகா.

உதாரணம்.

உண்ணிய சென்றான் உண்ணியா சென்றான்
உண்ணாமே போனான் உண்ணாமை போனான்

109. வன்றொடர்க்குற்றியலுகரவீற்று வினையெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகும்: மற்றைக் குற்றியலுகரவீற்று வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் மிகா.

Amazon Year end offer Mobiles

உதாரணம்.

அடித்துக் கொன்றான் உண்பாக்குச் சென்றான்
பொருது சென்றான் நடந்து போனான்
எய்து கொன்றான் அவனல்லது பேசுவார் யார்
துவ்விகுதி கெட நின்ற எதிர்மறைத் தெரிநிலை வினை வினையெச்சத்தின் முன் வரும் வல்லினமிகும்.

உதாரணம்
உண்ணப் போனான்

2. வினையெச்சத்தீற்று னகர லகரங்கள், வல்லினம் வந்தால், றகரமாகத் திரியும்: வான் பான் இரண்டுந்திரியா.

உதாரணம்.
வரிற்கொள்ளும் உண்டாற்கொடுப்பேன்
அறிவான்சென்றான் உண்பான் போனான்

இ உ ஐ யொழிந்த உயிரீற்றஃறிணைப் பெணர் முன் வல்லினம் புணர்தல்
3. அ, ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, என்னும் ஆறயிரீற்றஃறிணைப் பெயர் முன்னும் வரும் வல்லினம் இரு வழியினும் மிகும்.

உதாரணம்.
அல்வழி வேற்றுமை
விளக்குறிது விளக்கோடு
தாராச்சிறிது தாராச்சிறை
தீச்சுடும் தீச்சுவாலை
கொண்மூக்கரிது கொண்மூக்கருமை
சேப்பெரிது சேப்பெருமை

4. அகரவீற்றஃறிணைப் பன்மைப் பெயர் முன்னும்: வகரவைகாரவீற்றஃறிணைப் பன்மைப் பெயர் முன்னும் வரும் வல்லினம் இரு வழியினும் மிகா.

உதாரணம்.
அல்வழி வேற்றுமை
பல போயின பல படைத்தான்
சில சென்றன சில சொற்றான்
உள்ளன குறைந்தன உள்ளன கொடுத்தான்
உள்ளவை தகர்ந்தன உள்ளவை தந்தான்

பல சில என்னும் இரு பெயருந் தம் முன்னே தாம் வரின், வருமொழி முதலெழுத்து இயல்பாகியும், மிக்கும், நிலைமொழியீற்றின் அகரங்கெட லகரம் றகரமாகத் திரிந்துந் தியாதும், வரும்.

உதாரணம்.
பலபல பலப்பல பற்பல பல்பல

பல, சல என்னும் இரு பெயர் முன்னும் பண்புத் தொகையிற் பிற பெயர் வரின், நிலை மொழியீற்றின் அகரங்கெடாதுங் கெட்டும் வரும்.

உதாரணம்.
பல்கலை பல்கலை சிலகலை சில்கலை
பலமலை பனடமலை சிலமலை சின்மலை

5. ஆ, மா, ஆமா, பீ, நீ என்னும் பெயர்களின் முன்வரும் வல்லினம் அல்வழியில் இயல்பாம்.

உதாரணம்.
ஆ தீண்டிற்று மா சிறிது ஆமா பெரிது பீ கிடந்தது நீ பெரியை
மா – இங்கே வலங்கு. ஆமா – காட்டுப்பசு

6. பூ என்னும் பெயர் முன் வரும் வல்லெழுத்து மிகுதலேயன்றி இனமெல்லெழுத்தும் மிகும்.

உதாரணம்.
பூங்கொடி பூங்கரும்பு
பூ என்பது மலருக்கும் பொலிவுக்கும் பெயர். முலர்ப்பொருளில் வேற்றுமை: பொலிவுப் பொருளில் அல்வழி.

முற்றியலுகர வீற்றுப் பெயர் முன் வல்லினம் புணர்தல்

7. முற்றியலுகரவீற்றுப் பெயர் முன் வரும் வல்லினம் இரு வழியினும் மிகும்.

உதாரணம்.
அல்வழி வேற்றுமை
பசுக்குறிது பசுக்கோடு

8. முற்றியலுகர வீற்று அது, இது, உது, என்னுஞ் சுட்டுப்பெயர் முன்னும், எது என்னும் வினாப் பெயர் முன்னும், ஒரு, இரு, அறு, எழு என்னும் விகாரவெண்ணுப் பெயர் முன்னும் வரும் வல்லினம் மிகவாம்.

உதாரணம்.
அல்வழி வேற்றுமை
அது குறிது அது கண்டான்
இது சிறிது இது சொற்றான்
உது தீது உது தந்தான்

Amazon Year end offer Laptops

ஒருகை, இருசெவி, அறுகுணம், எழுகடல்

இ ஐ ர ழ வீற்றஃறிணைப் பெயர்முன் வல்லினம் புணர்தல்
9. இகர ஐகாரவுயிர்களையும் ய ர ழ வொற்றுக்களையும் இறுதியாகவுடைய அஃறிணைப் பெயர்களின் முன் வரும் வல்லினம், வேற்றுமையினும், அல்வழியிலே பண்புத்தொகையினும், உவமைத்தொகையினும், மிகும் எழுவாய்த் தொடரினும், உம்மைத் தொகையினும் மிகவாம்.

உதாரணம்.
கரிக்கோடு
நாய்க்கால் யானைச்செவி
தேர்த்தலை பூழ்ச்செவி வேற்றுமை
மாசித்திங்கள்
மெய்க்கீர்த்தி சாரைப்பாம்பு
கார்ப்பருவம் பூழ்ப்பறவை பண்புத்தொகை
காவிக்கண்
வேய்த்தோள் குவளைக்கண்
கார்க்குழ் காழ்ப்படிவம் உவமைத்தொகை
பருத்திகுறிது
நாய்தீது யானைகரிது
வேர்சிறிது யாழ்பெரிது எழுவாய்
பரணி-
கார்த்திகை
பேய்பூதம் யானைகுதிரை
நீர்கனல் இகழ்புகழ் உம்மைத்தொகை

இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், ஏழாம் வேற்றமைத் தொகையினும், வருமொழி வினையாய விடத்து, வல்லினம் மிகா.

உதாரணம்.
இரண்டாம் வேற்றுமை ஏழாம்வேற்றுமை
புளி தின்றான் அடவிபுக்கான்
குவளை கொய்தான் வரைபாய்ந்தான்
வேய் பிளந்தான் வாய்புகுந்தது
தேர் செய்தான் ஊர் சென்றான்
தமிழ் கற்றான் அகழ் குதித்தான்
காவித்தடம், மனைத்தூண் என உருபும் பயனும் உடன்றொக்க தொகையாயின், வல்லினம் மிகுமெனக் கொள்க. புளி தின்றான், அடவி, புக்கம் என்பன, குளியைத் தின்றான், அடவியின் கட்புக்கான் என விரிதலின், உருபு மாத்திரந்தொக்க தொகை. காவித்தடம், மனைத்தூண் என்பன, காவியையுடைய தடம், மனையின் கண்ணதாகிய தூண் என விரிதலின் உருபும் பயனும் உடன்றொக்க தொகை.

ஏரிகடை, குழவிகை, மலைகிழவோன். எனச் சிறுபான்மை அஃறிணைப் பெயரிடத்து வேற்றுமையில் வல்லினம் மிகாமை காண்க.

ஒரேவிடத்து, வேய்ங்குழல், ஆர்ங்கோடு என வேற்றுமையில் யகர ரகரங்களின் முன்னும், பாழ்ங்கிணறு எனப்பண்புத் தொகையில் ழகரத்தின் முன்னும், இனமெல்லெழுத்து மிகுமெனக் கொள்க.

பேய்கோட்பட்டான், பேய்க்கோட்பட்டான். எ-ம். சூர்கோட்பட்டான், சூர்க்கோட்பட்டான். எ-ம். ஒரோ வழிச்செயப்பாட்டுவினை முடிக்குஞ்சொல்லாக வருமிடத்து, யகர ரகரங்களின் முன் வரும் வல்லினம், ஒரு கால் இயல்பாயும், ஒரு காற்றிரிந்தும் வரும்.

சில மரப்பெயர்முன் வல்லினம் புணர்தல்
10. உயிற்றுச் சில மரப்பெயர் முன் வல்லினம் வரின், இன மெல்லெழுத்து மிகும்.

உதாரணம்.
மா + காய் – மாங்காய்
விள + காய் – விளாங்காய்

11. இகர, உகர லகரவீற்றுச் சில மரப்பெயர் முன் வல்லினம் வரின், அம்முச்சாரியை தோன்றும்.

உதாரணம்.
புளி + காய் – புளியங்காய்
புன்கு + காய் – புன்கங்காய்
ஆல் + காய் – ஆலங்காய்

12. ஐ காரவீற்றுச் சில மரப்பெயர் முன் வல்லினம் வரின், நிலைமொழியீற்றை காரங் கெட்டு அம்முச்சாரியை தோன்றும்.

உதாரணம்.
எலுமிச்சை + காய் – எலுமிச்சங்காய்
மாதுளை + காய் – மாதுளங்காய்

சில வேற்றுமையுருபின் முன் வல்லினம் புணர்தல்
13. ஒடு, ஓடு என்னும் மூன்றாம் வேற்றுமையுருபு களின் முன்னும் அது, ஆது, அ என்னும் ஆறாம் வேற்றுமை யுருபுகளின் முன்னும் வரும் வல்லினம் மிகா.

உதாரணம்.
மகனொடு போனான் மகனோடு போனான்
தனது கை தனாது கை தன கைகள்

குற்றியலுகரவீறு
14. வன்றொடர்க் குற்றியலுகரவீற்று மொழிகளின் வரும் வல்லினம் இரு வழியினும் மிகும்.

உதாரணம்.
அல்வழி வேற்றுமை
கொக்குக்கடிது கொக்குச்சிறை
சுக்குத்திப்பிலி சுக்குக்கொடு

15. மென்றொடர்க் குற்றியலுகரவீற்று மொழிகளின் முன் வரும் வல்லினம் அல்வழியில் இயல்பாம்: வேற்றுமையிலே மிகும்.

உதாரணம்.
அல்வழி வேற்றுமை
குரங்கு கடிது குரங்குக்கால்
அம்பு தீது அம்புத்தலை
குரங்கு பிடித்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையிலும், அரங்கு புக்கான் என ஏழாம் வேற்றுமைத் தொகையிலும், வருமொழி வினையாயவிடத்து, வல்லினம் மிகாவெனக் கொள்க.

16. ஏழாம் வேற்றுமையிடப்பொருள் உணர நின்ற அன்று, இன்று, என்று, பண்டு, முந்து, என்னும் இடைச்சொற்களின் முன் வரும் வல்லினம் மிகா.

உதாரணம்.
அன்று கண்டான் பண்டு பெற்றான்
இங்குச்சென்றான் ஈங்குச்சென்றான்
உங்குத்தந்தான் ஊங்குத்தந்தான்
எங்குப்பெற்றான் யாங்குப்பெற்றான்
யாண்டுப் பெற்றான்

17. நெடிற்றொடர், ஆய்தத்தொடர், உயிர்த்தொடர், இடைத்தொடர் என்னும் இந்நான்கு தொடர்க் குற்றியலுகர வீற்றுமொழிகளின் முன் வரும் வல்லினம், இரு வழியினும் இயல்பாம்.

உதாரணம்.
அல்வழி வேற்றுமை
நாகு கடிது நாகு கால்
எஃகு கொடிது எஃகு கூர்மை
வரகு சிறிது வரகு சோறு
தௌ;கு பெரிது தௌ;கு பெருமை

18. டுவ்வையும் றுவ்வையும் இறுதியிலுடைய நெடிற்றொடர் உயிர்த்தொடர்க் குற்றியலுகரவீற்று மொழிகளின் முன் நாற்கணமும் வரின், உகரமேறிய டகர றகர மெய்கள் வேற்றுமையிற் பெரும்பாலும் இரட்டும்.

ஆட்டுக்கால்
ஆட்டுமயிர்
ஆட்டுவால்
ஆட்டதர் ஆற்றுக்கால்
ஆற்றுமணல்
ஆற்றுவழி
ஆற்றூறல் நெடிற்றொடர்
பகட்டுக்கால்
பகட்டுமார்பு
பகட்டு வால்
பகட்டடி வயிற்றுக்கொடல்
வயிற்றுமயிர்
வயிற்றுவலி
வயிற்றணி உயிர்த்தொடர்

காட்டரண், ஏற்றுப்பன்றி, வரட்டாடு, வெளிற்றுப்பனை எனச் சிறுபான்மை அல்வழியிலே பண்புத்தொகையில் இரட்டுதலும், வெருக்குக்கண், எருத்துமாடு எனச் சிறுபான்மை இரு வழியிலும் பிறவொற்றிரட்டுதலும் உளவெனக் கொள்க.

ஆடு கொண்டான், ஆறு கண்டான், பகடு தந்தான், பயறு தின்றான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், காடு போந்தன், ஆறு பாய்ந்தான், அகடு புக்கது, வயிறு புக்கது என ஏழாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாயவிடத்து, இரட்டா வெனக் கொள்க.

19. மென்றொடர்க் குற்றியலுகர வீற்று மொழிகளுள்ளே சில, நற்கணமும் வரின், வேற்றுமையிலும், அல்வழியிலே பணபுத்தொகையிலும், உவமைத் தொகையிலும், வன்றொடர்க் குற்றியலுகரமாதலுமுண்டு.

உதாரணம்.

மருந்து + பை – மருந்துப்பை
கரும்பு + நாண் – கருப்புநாண்
கரும்பு + வில் – கருப்புவில் வேற்றுமை
கன்று + ஆ – கற்றா
அன்பு + தளை – அற்புத்தளை பண்புத்
என்பு + உடம்பு – எறபுடம்பு தொகை
குரங்கு + மனம் – குரக்குமனம் உவமைத்
இரும்பு + நெஞ்சம் – இருப்புநெஞ்சம் தொகை

20. சில மென்றொடர்க் குற்றியலுகரவீற்று மொழிகள் இறுதியில் ஐகாரச்சாரியை பெற்று வரும்.

உதாரணம்.
பண்டு + காலம் – பண்டைக்காலம்
இன்று + நாள் – இற்றைநாள் அல்வழி
அன்று + கூலி – அன்றைக்கூலி வேற்றுமை
இன்று + நலம் – இற்றை நலம்
சில மென்றொடர் மொழிகள், வருமொழி நோக்காது, ஒற்றை, இரட்டை எனத் தனிமொழியாக நின்றும், ஈராட்டை, மூவாட்டை எனத்தொடர் மொழியாக நின்றும், ஐகாரச்சாரியை பெறுதலுமுண்டு.
நேற்று + பொழுது – நேற்றைப்பொழுது. எ-ம்.
நேற்று + கூலி – நேற்றைக்கூலி. எ-ம். வன்றொடர் ஐகாரச்சாரியை பெறுதலுமுண்டு.

குற்றியலுகரவீற்றுத் திசைப்பெயர்களோடு திசைப்பெயர்களும் பிற பெயர்களும் பிற பெயர்களும் புணர்தல்
21. வடக்கு, குணக்கு, குடக்கு, என்னுஞ் செற்களின் ஈற்றுயிர் மெய்யுங் ககரவொற்றுங் கெடும்.

உதாரணம்.
வடக்கு + கிழக்கு – வடகிழக்கு
மேற்கு – வடமேற்கு
திசை – வடதிசை
மலை – வடமலை
வேங்கடம் – வடவேங்கடம்
குணக்கு + திசை – குணதிசை
கடல் – குணகடல்
குடக்கு + திசை – கடதிசை
நாடு – குடநாடு
கிழக்கு என்பது, ஈற்றுயிர் மெய்யுங் ககரவொற்றும் ழகரமெய்யின் மேனின்ற அகரவுயிருங்கெட்டு, முதனீண்டு வரும்: அங்கணம் வருமிடத்து, வல்லெழுத்து, இயல்பாகியும் ஓரோவிடத்து, வல்லெழுத்து, இயல்பாகியும், ஓரோவிடத்து மிகுந்தும் புணரும்.
உ-ம்
கிழக்கு + பால் – கீழ்பால்
திசை – கீழ்த்திசை
கீழைச்சேரி, கீழைவீதி, என ஐகாரம் பெறுதலுமுண்டு.
தெற்கு என்பது, ஈற்றுயிர்மெய் கெட்டு, றகரம் னகரமாகத்திரிந்து வரும்.

உதாரணம்.
தெற்கு + கிழக்கு – தென்கிழக்கு
மேற்கு – தென்மேற்கு
மலை – தென்மலை

மேற்கு என்பது ஈற்றுயிர்மெய் கெட்டு, றகரம் லகரமாகத் திரிந்து வரும். தகரம் வரிற்றிரியாது.

உதாரணம்.
மேற்கு + கடல் – மேல்கடல்
வீதி – மேல்வீதி
திசை – மேற்றிசை

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சிறுவர் சீர்திருத்தம் - கல்யாணசுந்தரம்
திருக்குறள் படையியல்