தமிழ் இலக்கணம் புணரியல் பகுதி 2

தமிழ் இலக்கணம்
மெய்யீற்றின் முன் யகரம் புணர்தல்

21. யகரமல்லாத மெய்கள், தம் முன் யகரம் வந்தாள் இகரச்சாரியை பெறுதலுமுண்டு.

உதாரணம்.
வேள் + யாவன் – வேளியாவன்
மண் + யானை – மண்ணியானை
வேள்யாவன் என இகராச்சாரியை பெறாது வருதலே பெரும்பான்மையாம்.

22. தனிக்குற்றெழுத்தைச் சாராத யகரமெய் வருமொழி யகரம் வந்தாற் கெடும்.

உதாரணம்.
வேய் + யாது – வேயாது

Amazon Year end offer Mobiles

23. அ, இ, உ என்னும் மூன்றும் சுட்டின் முன்னும், யகரமொழித்த மெய்கள் வந்தால், வந்தவெழுத்து மிகும்: யகரமும் உயிரும் வந்தால், இடையில் வகரந் தோன்றும்.

உதாரணம்.
அக்குதிரை இக்குதிரை உக்குதிரை எக்குதிரை
அம்மலை அம்மலை உம்மலை எம்மலை
அவ்வழி இவ்வழி உவ்வழி எவ்வழி
அவ்யபனை இவ்யானை உவ்யானை எவ்யானை

24. அந்த, இந்த, உந்த எந்த என மரூஉமொழிகளாய் வருஞ்சுட்டு வினாக்களின் முன் வரும். வல்லினம் மிகும்.

உதாரணம்.
அந்தக்கல், இந்தக்கல், உந்தக்கல், எந்தக்கல்

உயர்தினைப் பொதுப் பெயர்களின் முன் வல்லினம் புணர்தல்

25. உயர்தினைப் பெயாப் பொதுப் பெயர்களின் ஈற்றுயிர் முன்னும், யகர ரகரமெய்களின் முன்னும் வரும் வல்லினம் இருவழியினும் மிகாதியல்பாம்.

உதாரணம்.
அல்வழி வேற்றுமை
நம்பிக்குறியன்
விடலைசிறியன்
செய்பெரியன்
அவர் தீயர் நம்பிக்கை
விடலை செவி

நும்பிக்கொற்றான், சாத்திப் பெண், சேய்க்கடவுள், தாய்ப்பசு என இருபெயரொட்டுப் கண்புத்தொகையினும், தாய்க்கொலை, ஒன்னலர்ச் செகுத்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், செட்டித்தெரு என ஒரோவிடத்து ஆறாம் வேற்றுமைத் தொகையினும் வல்லின மிகுமெனக் கொள்க.

முகப்பிறந்தது, மகப்பெற்றாள், எ-ம். பிதாக்கொடியன்.பிதாக்கை, எ-ம். ஆடுச்சிறியன், ஆடுச்செவி, எ-ம். கோத்தீயன், கோத்தலை, எ-ம். அகர, ஆகார ஊகார ஓகாரங்களின் முன் வரும் வல்லினம் இரு வழியினும் மிகுமெனக் கொள்க.

26. உயர்திணைப் பெயர் பொதுப்பெயர்களின் ஈற்று லகர ளகர ணகர னகர மெய்கள், வல்லினம் வந்தால் இருவழியினுந் திரியாதியல்பாம்.

உதாரணம்.
அல்வழி வேற்றுமை
தேன்றல்குறியன்
அவள்சிறியள்
அவன்பெரியான் தோன்றல்கை
அவள்செவி
அவன்பொருள் உயர்திணைப் பெயர்

சில உயர்திணைப் பெயர் முன் நாற்கணமும் புணர்தல்

27. னகலர லகரவீற்றுச் சிலவுயர்திணைப் பெயர் முன் நாற்கணமும் புணருமிடத்து, உம்மைத் தொகையினும், இருபெயரொட்டுப் பண்புத் தொகையினும் ஆறாம் வேற்றமைத் தொகையினும், நிலைமொழியேனும், இவ்விரு nhழியுமெனும், விகாரப்படும்.

உதாரணம்.
உம்மைத் தொகை

கபிலன் + பரணன் – கபிலபரணர்
இரு பெயரொட்டுப் பண்புத்தொகை
சிவன் + பெருமான் – சிவபெருமான்

வேற்றுமைத் தொகை

குமரன் + கோட்டம் – குமரகோட்டம்
குமரக்கோட்டம்
வாணியர் + தெரு – வாணியத்தெரு

விளிப்பெயர் முன் வல்லினம் புணர்தல்

28. விளிப்பெயாPற்று உயிர் முன்னும் ய ர ழ வொற்றுக்களின் முன்னும் வரும் வல்லினம் மிகாதியல்பாம். ஆப் பெயாPற்று லகர ளகர ணகர னகரங்கள் வல்லினம் வந்தால் திரியாதியல்பாம்.

உதாரணம்.
புலவபாடு சாத்தா கேள்
நம்பிசெல் தம்பீ தா
வேந்து கூறு மகனே படி
விடலை போ நங்காய் பார்
நாய்கீர் சென்மின் நாய்காய் பார்

Amazon Year end offer Laptops

விளக்கொடியை, பிதாகடகூறாய், ஆடூச் சொல்லாய், சேச்சொல்லாய், கோப்பேசாய், என அகர ஆகார ஊகார ஏகார ஓகாரங்களை இயல்பீறாகவுடைய விளிப்பெயர் முன் வரும் வல்லினம் மிகுமெனக் கொள்க.

ஈற்று வினா முன்னும் யாவினா முன்னும் வல்லினம் புணர்தல்

29. ஆ, ஏ, ஒ என்னும் மூன்றீற்று வினா முன்னும் யபவினா முன்னும் வரும் வல்லினம் மிகவாம்.

உதாரணம்.
அவனா கொண்டான் அவனே சென்றான்
அவனோ தந்தான் யா பெரிய

வினைமுற்று வினைத் தொகைகளின் முன் வல்லினம் புணர்தல்

30. வினைமுற்று வினைத்தொகைகளின் ஈற்றுயிர் முன்னும், ய ர ழ வொற்றுக்களின் முன்னும் வரும் வல்லினம் மிகாதியல்பாம். ஆச்சொற்களின் ஈற்று லகர ளகர ணகர னகரங்கள், வல்லினம் வந்தாள்
திரியாதியல்பாம்.

உதாரணம்.

தெரிநிலை வினைமுற்று
உண்டன குதிரைகள் உண்ணா குதிரைகள்
வருதி சாத்தா வந்தனை சாத்தா
வந்தது புலி வந்தாய் பூதா
உண்டீர் தேவரே உண்டாhட தேவர்
உண்பல் சிறியேன் உண்டாள் சாத்தி
வந்தேக் சிறியேன் வந்தான் சாத்தன்
குறிப்பு வினைமுற்று
கரியன குதிரைகள் வில்லி சாத்தா

31. நொ, து என்னும் ஏவலொருமை வினைமுற்றிரண்டின் முன்னும் வரும் வல்லினம் மிகும்.

உதாரணம்.

நொக்கொற்றா துச்சாத்தா
வினைத்தொகை
விரிகதிர் ஈபொருள்
அடுகளிறு வனைகலம்
ஆடு பாம்பு அஃகுபிணி
பெருகுபுனல் ஈட்டுதனம்
விஞ்சுபுகழ் மல்கு சுடர்
உண்கலம் தின்பண்டம்
கொல்களிறு கொள்கலம்

பெயரெச்சத்தின் முன் வல்லினம் புணர்தல்

32. அகரவீற்றுப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகா. ஈற்றுயிர் மெய் கெட்டு ஈகாரவிறுதியாக நின்ற எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகும்.

உதாரணம்.
உண்ட கொற்றன் கரிய டிகாற்றன்
உண்ணாத குதிரை இல்லாத குதிரை
உண்ணாக் குதிரை இல்லாக் குதிரை

33. இ, ய், ஆ, ஊ, என, அ என்னும் விகுதிகளையுடைய தெரிநிலை வினை வினையெச்சங்களின் முன்னும் அ, றி என்னம் விகுதிகளையுடை இவ்விரு வகை வினையெச்சங்களின் முன்னும் வரும் வல்லினம் மிகும்.

உதாரணம்.

தேடிக்கொண்டான் போய்க்கொண்டான்
உண்ணாச்சென்றான் உண்ணுச் சென்றான்
உண்டெனப்பச தீர்ந்தது உண்ணப் போனான்
மெல்லப் பேசினான் நாளின்றிப் போனான்

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திருக்குறள் அரணியல்
தெய்வம் தேடுதல் - கல்யாணசுந்தரம்