தமிழ் இலக்கணம் புணரியல் பகுதி 1

தமிழ் இலக்கணம்
தமிழ் இலக்கணம் புணரியல்

புணர்ச்சியாவது வேற்றுமைப்புணர்ச்சியும், அல் வழிப்புணர்ச்சியும் என இரண்டு வகைப்படும்.

1. வேற்றுமைப் புணர்ச்சியாவது, ஐ, ஆல், கு, இன், அது, கண், என்னும் ஆறுருப்புகளும் இடையில் மறைந்தாயினும் வெளிப்பட்டாயினும் வரச்சொகள் புணர்வதாம்.

உதாரணம்.
வேற்றுமைத்தொகை வேற்றுமைவிரி
மரம்வெட்டினான் .. மரத்தை வெட்டினான்
கல்லெறிந்தான் .. கல்லாலெறிந்தான்
கொற்றன்மகன் .. கொற்றனுக்கு மகன்
மலைவீழருவி .. மலையின் வீழருவி
சாத்தான்கை .. சாத்தனதுகை
மலைநெல் .. மலையின்கணெல்

Amazon Year end offer Mobiles

2. அலவழிப்புணர்ச்சியாவது, வேற்றுமையல்லாத வழியிற் புணர்வதாம். ஆது, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை, என்னும் ஐந்து தொகைநிலைத்தொடரும், எழுவாய்த்தொடர், விளித்தொடர், தெரிநிலை வினைமுற்றுத் தொடர், குறிப்பு வினைமுற்றுத்தொடர், பெயரெச்சத்தொடர், வினையெச்சத்தொடர், இடைச்சொற்தொடர், உரிச்சொற்றொடர், அடுக்குத்தொடர், என்னும் ஒன்பது தொகாநிலைத் தொடருமாகப், பதினான்கு வகைப்படும்.

தொகைநிலைத் தொடர்களுக்கு உதாரணம்

(1) கொல்யானை .. வினைத்தொகை
(2) கருங்குதிரை .. பண்புத்தொகை சாரைப்பாம்பு .. இருபெயரொட்டுப் பண்புத் தொகை
(3) மதிமுகம் .. உவமைத் தொகை
(4) இராப்பகல் .. உம்மைத் தொகை
(5) பொற்றொடி .. அன்மொழித் தொகை

தொகாநிலைத் தொடர்களுக்கு உதாரணம்

(1) சாத்தன் வந்தான் .. எழுவாய்த் தொடர்
(2) சாத்தவா .. விளித் தொடர்
(3) வந்தான் சாத்தன் .. தொரிநிலை வினைமுற்றுத் தொடர்
(4) பொன்னனிவன் .. குறிப்பு வினைமுற்றுத்தொடர்
(5) வந்த சாத்தன் .. பெயரெச்சத் தொடர்
(6) வந்து போனான் .. வினையெச்சத் தொடர்
(7) மற்றொன்று .. இடைச்சொற்றொடர்
(8) நனிபேதை ..உரிச்சொற்றொடர்
(9) பாம்பு பாம்பு .. அடுக்குத் தொடர்

3. இப்படி மொழிகள், வேற்றுமை வழியாலும், அல்வழியாலும், புணருமிடத்து, இயல்பாகவாயினும், விகாரமாகவாயினும் புணரும்.

4. இயலபு புணர்ச்சியாவது, நிலைமொழியும், வருமொழியும், விகாரமின்றிப் புணர்வதாம்.

உதாரணம்.
பொன்மணி சாத்தன்கை

5. விகாரப்புணர்ச்சியாவது, நிலைமொழியேனும், வருமொழியேனும், இவ்விரு மொழிமேனும், தோன்றல், திரிதல், கெடுதல் என்னும் மூன்று விகாரங்களுள் ஒன்றையாயினும் பெற்றுப் புணர்வதாம்.

உதாரணம்.
வாழை + பழம் – வாழைப்பழம் தோன்றல்
மண் + குடம் – மட்குடம் திரிதல்
மரம் + வேர் – மரவேர் கெடுதல்
நிலம் + பனை – நிலப்பனை கெடுதல், தோன்றல்
பனை + காய் – பனங்காய் கெடுதல், தோன்றல், திரிதல்

Amazon Year end offer Laptops

6. தோன்றல், திரிதல், கெடுதல், என்னும் இவ் விகாரமூன்றும், மயக்க விதி இன்மை பற்றியும், அல்வழி வேற்றுமைப் பொருணோக்கம் பற்றியும் வரும்.

7. தோன்றல் முதலிய விகாரங்கள் எவை பற்றி வரும்?

மயங்கா எழுத்துக்கள்

8. உயிரோடு உயிர்க்கு மயக்கவிதி இன்மையால், உயிhPற்றின்முன், உயிர் வரின், இடையே உடம்படு மெய்யென ஒன்று தோன்றும்.

உடம்படு மெய்யாவது, வந்த உயிருக்கு உடம்பாக அடுக்கும் மெய், நிலைமொழியீற்றினும் வருமொழி முதலினும் நின்ற உயிர்களை உடம்படுத்தும் மெய்யெனினும் பொருந்தும். உடம்படுத்தலெனினும், உடன் படுத்தலெனினும் ஒக்கும்.

9. மெய்யீற்றின்முன் மயங்குதற்கு உரியதல்லாத மெய்வரின், நிலைமொழியீற்றேனும், வருமொழி முதலேனும், இவ்விரண்டுமேனும் விகாரப்படும்.

10.மொழிக்கு ஈராகுமெனப்பட்ட பதிகொருமெய்களின் முன்னும், மொழிக்கு முதலாகுமெனப்பட்ட ஒன்பது மெய்களும் புணரும்போது, மயங்குதற்கு உரியனவல்லாத மெய்களைச் சொல்வாம் :-

லகர ளகரங்களின் முன்னே த ஞ ந ம என்னும் நான்கும் மயங்கா. ணுகர னகரங்களழன் முன்னே த ந என்னும் இரண்டும் மயங்கா. முகர மெய்யின் முன்னே க ச த ஞ ந என்னும் இரண்டும் மயங்கா ஞகரத்தின் முன்னே சகரமும் யகரமுமல்லாத ஏழம் மயங்கா. நுகரத்தின் முன்னே தகரமும் யகரமுமல்லாத ஏழம் மயங்கா. வுகரத்தின் முன்னே யகரமல்லாத எட்டும் மயங்கா.

மெய்யீற்றின் முன் உயிர் புணர்தல்

11. தனிக்குற்றெழுத்தைச் சாரத மெய்யீற்றின் முன் உயிர் வந்தால், வந்தவுயிர் அந்த மெய்யீற்றின் மேல் ஏறும்.

உதாரணம்.
ஆண் + அழகு – ஆணழகு
மரம் + உண்டு – மரமுண்டு

12. தனிக்குற்றெழுத்தை ச் சார்ந்த மெய்யீற்றின் முன் உயிர் வந்தால், அந்த மெய் இரட்டிக்கும்: இரட்டித்த மெய்யீற்றின் மேல் வந்தவுயிர் ஏறும்.

உதாரணம்.
கல் + எறிந்தான் – கல்லெறிந்தான்
பொன்; + அழகியது – பொன்னழகியது

உயீரிற்றின் முன் உயிர் புணர்தல்

13. இ, ஈ, ஐ என்னும் மூன்றுயிhPற்றின் முன்னும் உயிர் முதன் மொழிவந்தால், இடையில் யகரம் உடம்படு மெய்யாக வரும்.

உதாரணம்.
கிளி; + அழகு – கிளியழகு
தீ + எரிந்தது – தீயெரிந்தது
பனை + ஓலை – பனையோலை

14. அ, ஈ, உ, ஊ, ஒ, ஓ, ஒள என்னும் ஏழயிhPற்றின் முன்னும் உயிர் முதன் மொழி வந்தால், இடையில் வகரம் உடம்படுமெய்யாக வரும்.

உதாரணம்.
பல + அணி – பலவணி
பலா + இலை – பலாவிலை
திரு + அடி – திருவடி
பூ + அரும்பு – பூவரும்பு
நொ + அழகா – நொவ்வழகா
கோ + அழகு – கோவழகு
கௌ + அழகு – கௌவழகு

கோ என்பதன் முன் இல் என்னும் பெயர் வந்தால், இடையில் வகரம் வராது யகரம் வரும்.

உதாரணம்.
கோ + இல் – கோயில்
ஓரோவிடத்துக் கோவில் எனவும் வரும்.

15. ஏகாரவுயிற்றின் முன் உயிர் முதன் மொழி வந்தால், இடையில் யகரமாயினும், வகரமாயினும், உடம்படு மெய்யாக வரும்.

உதாரணம்.
அவனே + அழகன் – அவனேயழகன்
சே + உழுதது – சேவுழுதது

குற்றியலுகரத்தின் முன் உயிரும் யகரமும் புணர்தல்

16. குற்றியலுகரம், உயிர் வந்தால் தான் ஏறி நின்ற மெய்யைவிட்டுக் கெடும்: யகரம் வந்தால், இகரமாகத் திரியும்.

உதாரணம்.
ஆடு + அரிது – ஆடரிது
நாகு + யாது – நாகியாது

Amazon Year end offer Laptops

குற்றியலுகரஞ் சம்ஸ்கிருத பாடையில் இல்லாமையால், சம்பு, இந்து முதலிய வட மொழிகளின் ஈற்றுகரம் உயிர்வரிற் கெடாது நிற்க, உடம்படு மெய் தோன்றும்.

உதாரணம்.
சம்பு + அருளினான் – சம்புவருளினான்
இந்து + உதித்தது – இந்துவுதித்தது

சில முற்றியலுகரவீற்றின் முன் உயிரும் யகரமும் புணர்தல்

17. சில முற்றியலுகரமும், உயிர் வரின் மெய்யை விட்டுக்கெடுதலும், யகரம் வரின் இகரமாகத் திரிதலுமாகிய இவ்விரு விதியையும் பெறும்.

உதாரணம்.
கதவு + அழகு – கதவழகு
கதவு + யாது – கதவியாது

எல்லாவீற்றின் முன்னும் மெல்லினமும் இடையினமும் புணர்தல்

18. உயிரும் மெய்யுமாகிய எல்லாவீற்றின் முன்னும் வரும் ஞ ந ம ய வ க்கள், இருவழியினும், இயல்பாம்: ஆயினும் இவற்றுள் ண ள ன ல என்னும் நான்கின் முன்னும் வருநகரந் திரியும். இத்திரிபு மேற் கூறப்படும்;

வின, பலா, புளி, தீ, கடு, பூ, சே, பனை, கோ, கௌ, உரிஞ், மண், பொருந், மரம், பொன், வேய், வேர், வேல், தெவ், யாழ், வாள், என்னும் நிலைமொழிகளோடு, அல்வழிப்புணர்ச்சிக்கு உதாரணமாக, ஞான்றது, நீண்டது, மாண்டது, யாது, வலிது, என்னும் வருமொழிகளையும், வேற்றுமைப்புணர்ச்சிக்கு உதாரணமாக, ஞாற்சி நீட்சி, மாட்சி, யாப்பு, வன்மை, என்னும் வருமொழிகளையும் கூட்டிக்கண்டு கொள்க.

உதாரணம்.
விள + ஞான்றது – விளஞான்றது
உரிஞ் + ஞான்றது – உரிஞ10ஞான்றது
விள + ஞாற்சி – விளஞாற்சி
உரிஞ் + ஞாற்சி – உரிஞாற்சி

நிலைமொழியீற்றுட் சில விகாரப்படுதல், பின்பு அல்வவ்வீற்றிற் கூறும் விதியாற் பெறப்படும்.

19. தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த யகரமெய்யின் முன்னுந் தனி ஐகாரத்தின் முன்னும் வரும் மெல்லினம் மிகும்

உதாரணம்.
மெய் + ஞானம் – மெய்ஞ்ஞானம்
செய் + நன்றி – செய்ந்நன்றி
கை + மாறு – கைம்மாறு

20. நொ, து என்னும் இவ்விரண்டும் முன் வரும் ந ம ய வக்கள் மிகும்.

உதாரணம்.
நொ + ஞௌ;ளா – நொஞ்ஞௌ;ளா
யவனா – நொய்யவனா
து + ஞௌ;ளா – துஞ்ஞௌ;ளா
யுவனா – துய்யவனா
நோ – துன்பப்படு, து- உண்

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திருக்குறள் அமைச்சியல்
திருக்குறள் அரசியல் பகுதி 2