பிள்ளையின் நடத்தை கோளாறு, அதற்கான சிகிச்சை

Child's behavioral disorder and treatment

பிள்ளையை பெற்றால் மட்டும் போதும் என்று நிறுத்திக் கொள்ளாமல் பிறந்த குழந்தையை நல்வழியில் வளர்ப்பது தான் ஒரு பெற்றோரின் தலையாய கடைமை.

“ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய் “

விளக்கம்

தன் பிள்ளையைப் பண்பு நிறைந்தவன் எனப் பிறர் பாராட்டக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதினும் பெரிது மகிழ்வாள். என திருவள்ளுவர் மகான் கூறியுள்ளார்.

நடத்தை கோளாறு(Conduct Disorder) என்பது வளர் இளம் பருவத்தினரின் சமூக விரோத செயல்களை குறிக்கின்றது. குழந்தையின் ஒன்றுக்கு மேற்பட்ட செயல்பட்டு மையங்கள் மோசமாக பாதிக்கப்படுவதன் மூலம் உருவாகலாம். இதன் காரணிகள் வெறித்தனம், பொருட்களை உடைத்தல், பிறருக்கு விரும்பாத செயலை வேண்டுமென்றே செய்தல், திருடுதல் மற்றும் ஏமாற்றுதல். மேலும்,

அடுத்தவரின் மனம் நோகும்படி கேலி செய்தல், பயமுறுத்துதல், தொடர்ச்சியாக தொந்தரவு தருதல். எதற்கெடுத்தாலும் சண்டை போடுதல் அவர்களை ஆயுதங்களால் தாக்க முற்படுதல், இரக்கமின்றி நடந்து கொள்ளுதல், பாலியல் விஷயங்களுக்கு வளர் இளம் பருவத்திலேயே அதிக ஆர்வம் கொள்ளுதல்.

சமுதாய சீர்குலைவு விளைவுகள்
  • 13 வயதிற்கு முன்பிருந்தே பெற்றோர் தடுத்தாலும் கேட்காமல் இரவில் வெளியில் தங்குவது.
  • பெற்றோர் அல்லது பாது காவலர் இருக்கும்பொழுது வீட்டை விட்டு ஓடிச் சென்று நீண்ட நாட்கள் திரும்பாமலிருப்பது.
  • 13 வயதிற்கு மேல் பள்ளிக்கு மட்டம் போடுதல்.
  • இப்பழக்க வழக்கங்களில் உள்ளவர்களின் வாழ்க்கை சமுதாயத்தில் தீவிர பாதிப்பை உண்டாக்கும்.

Amazon: Laptops Year end deals

சிகிச்சை

முதலில் நல்ல மருத்துவரை அணுகி குழந்தைக்கு ஆலோசனை வழங்க வேண்டும். இது போன்ற குழந்தைகளுக்கு தரப்படும் சிகிச்சை சிக்கலானது. நடத்தையில் உள்ள தீவிரத்தினை கொண்டே சிகிச்சையும் அளிக்க முடியும். அந்த பிள்ளையின் ஒத்துழைப்பு, பயம், மற்றவர் மேல் கொண்டுள்ள அவநம்பிக்கை ஆகியவற்றையும் கணக்கில் கொண்டே சிகிச்சை செய்ய இயலும். பிள்ளையின் பெற்றோர், ஆசிரியர் மற்றும் மருத்துவர் இவர்களின் கூட்டு முயற்சியே தான் சிகிச்சை அளிக்க இயலும்.

குழந்தைகள் அவர்களின் கோபத்தை கட்டுப்படுத்தவும், பழக்கவழக்கங்களை சீர் செய்யவும். உளவியல் ரீதியான சிகிச்சை தேவைப்படும். கல்வியில் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு கல்வி கற்க நிபுணர்களின் ஆலோசனை தேவைபடுகிறது. மன அழுத்தத்தால் அவதிப்படும் இளம் பருவத்தினருக்கு மனோ தத்துவ முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும்.

இதனை ஒவ்வொரு பெற்றோரும் பிள்ளையின் நடத்தையின் மாற்றத்தை உற்று கவனிக்க வேண்டும். அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளித்து சமுதாயத்தில் நல்ல குடிமகனாக உருவாக்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் தோலில் ஏற்படும் மாற்றங்கள்
யோகா கலை வரலாறு

2 comments