ஆரோக்கியமான பயத்தம்பருப்பு கஞ்சி

payattham kanji
தேவையானவை

பயத்தம்பருப்பு – 1/2 டம்ளர்
வெல்லம் – 1/4 டம்ளர் (பொடி செய்க)
பால் – 3/4 டம்ளர்
தண்ணீர் – 2 டம்ளர்
ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன்
நெய் – 2டீஸ்பூன்
முந்திரி – 4 உடைத்தது
திராட்சை – தேவையான அளவு

செய்முறை

முதலில் பயத்தம்பருப்பு கொடுக்கப்பட்டுள்ள அளவு தண்ணீரில் (2 டம்ளர்) சேர்த்து வேக வைக்க வேண்டும். அடுத்ததாக வெல்லத்தை தேவையான அளவு நீர் சேர்த்து அடுப்பில் வைத்து கரைக்கவும். பிறகு வெல்லத்தை வடிகட்டி பயத்தம் பருப்புடன் சேர்க்கவும். இக்கலவையுடன் பால் ஏலக்காய்தூள் மற்றும் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும். பயத்தம் பருப்பு கஞ்சி ரெடி. இது மிகவும் ஆரோக்கியமான உணவு. டயட் (Diet) இருப்பவர்கள் இரவு உணவிற்கு பதிலாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.

Amazon: Laptops Year end deals

சளி இருமல் தீர வீட்டு வைத்தியம்
டேஸ்டான வாழைப்பழ சப்பாத்தி

One comment