சண்டே ஸ்பெஷல் பனீர் புலாவு

பனீர் புலாவு
தேவையானவை

பாசுமதி அரிசி – 1/4 kg or 2 டம்ளர்
பெரிய வெங்காயம் – 3
தக்காளி – 3
பன்னீர் – 250gm
இஞ்சி அரைத்தது – 2 டீஸ்பூன்
பூண்டு அரைத்தது – 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
எலுமிச்சம்பழம் சாறு – 1 பழம்
அல்லது
தயிர் – 1/4 டம்ளர்
மல்லித்தழை – தேவைக்கேற்ப
நெய் – சிறிதளவு
எண்ணெய் – 25gm (தேவைக்கேற்ப)
பட்டை – 2
இலவங்கம் – 2
ஏலக்காய் – 2
தண்ணீர் – 3 டம்ளர் (அரிசி 1 பங்கு எனில் தண்ணீர் 1.5 பங்கு இருக்க வேண்டும்.)

செய்முறை

அரிசியை கழுவி தண்ணீரில் ஊற வையுங்கள். வெங்காயத்தை நீளமாக வெட்டிக்கொள்ளுங்கள். தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பன்னீரை கட் செய்து கொள்ளுங்கள். குக்கரில் நெய் மற்றும் எண்ணெயை ஊற்றி பட்டை, இலவங்கம் மற்றும் ஏலக்காய் பொருட்களை போட்டு தாளிக்க வேண்டும். பின்பு அதனுடன் வெங்காயம், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.

Amazon: Laptops Year end deals

வெங்காயம் வதங்கியவுடன் அதனுடன் தக்காளியை சேருங்கள். பின்பு மிளகாய் தூள், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, பனீர் துண்டுகள் சேர்க்க வேண்டும். பச்சை வாசனை போகும்வரை வதங்கியவுடன் எலுமிச்சை சாறு அல்லது தயிர் சேர்த்து மேலும் வதக்கவும். இப்போது ஊறவைத்த அரிசியை தண்ணீருடன் சேர்த்து உப்பு போட்டு கிளற வேண்டும். குக்கரை மூடி ஒன்று அல்லது இரண்டு விசில் வந்ததும் அடுப்பை குறைவாக வைத்து 5 நிமிடங்கள் கழித்து கடைசியாக மல்லித்தழை தூவி இறக்கி வையுங்கள். இப்போது சுவையான பனீர் புலாவு தயார்.

ருசியான நெய் அப்பம்
காலிஃப்ளவர் கேரட் கூட்டு

One comment