பனீர் தோசை செய்முறை

பனீர் தோசை
தேவையானவை

பச்சரிசி – 1 டம்ளர்
புழுங்கலரிசி – 1டம்ளர்
பனீர் – துருவி வைத்துக்கொள்ளவும்
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவைக்கேற்ப
மல்லித்தழை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

பச்சரிசியையயும், புழுங்கலரிசியும் ஒன்றாக சேர்த்து குறைந்தது ஒரு மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். பனீரை சிறிதாக வெட்டிக்கொள்ளவும். ஊறவைத்த அரிசியை நன்றாக அரைத்து தேவையான உப்பு சேர்த்து கலக்கி கொள்ளவும். அதனுடன் சிறிதாக வெட்டிவைத்த பனீர், சிறிதாக நறுக்கி வைத்த பச்சை மிளகாய், மல்லித்தழை சேர்த்து கலக்கிக்கொள்ளவும். தோசையை ஊத்தப்பம் சாயலில் ஊற்றி எடுத்து சுவைத்து பரிமாறலாம். சூடாக சாப்பிட சுவை அதிகமாக இருக்கும். காரம் வேண்டுபவர்கள் சிறிது இட்லி பொடியை தோசையின் தூவி எடுத்து சாப்பிடலாம்.

Buy Kitchen Appliance in Amazon

கறிவேப்பிலை நெல்லிப்பொடி செய்முறை
வீட்டில் ரசப்பொடி செய்யலாம்