பசுமைப்புரட்சி வியாபாரிகளுக்கே – நம்மாழ்வார்

விவசாயத்தில் சர்வதேச புழுகு

பசுமைப்புரட்சி வியாபாரிகளுக்கே

இங்கு 2 விஷயங்கள் நாம் கவனிக்க வேண்டும். ஒன்று ரசாயன உரங்களை இடுவது எப்படி புழக்கத்தில் வந்தது? மற்றோன்று ரசாயன உரங்களை இட வேண்டுமா என்ற கேள்வி?

வெடிமருந்து வியாபாரிகள்

உலகப்போர் முடிந்த நேரத்தில் வெடிமருந்து தயாரித்த வியாபாரிகள் கவலை கொண்டார்கள். அடுத்து வியாபாரத்திற்கு என்ன செய்வது என்று அப்போது விஞ்ஞானிகள் புதிய வழிகளை காட்டினார்கள்.

Amazon: Trending Smartphones Collection

செடிகளுக்கு அம்மோனியா தேவை. உப்பு தொழிற்சாலையை உர உற்பத்திக்கானதாக மாற்றிவிடலாம். 1925 அம்மோனியம் சல்பேட் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் புழக்கத்தில் வந்தது. அந்த நேரத்தில் அங்கு எதிர்ப்பு கிளம்பியது. இது எதிர்காலத்தில் தீங்கு விளைவிக்க கூடியது என்றார்கள்.

இதற்கு எதிரான ஆராய்ச்சி ஐரோப்பாவில் நடத்தப்பட்டது. அனால் இட்லர் தலைதூக்கிய காலத்தில் இந்த ஆராய்ச்சிகளை அழித்துவிட்டார்கள்.

இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த காலத்தில் வெடி உப்பு தொழிற்சாலைகள் எல்லாம் உர உற்பத்தியில் ஈடுபட்டன. உற்பத்தி அதிகமானதால் அதை ஐரோப்பாவிற்குள் விற்க முடியவில்லை. உலகம் முழுதும் விற்பனை தேவைப்பட்டது.

இந்த வரலாற்று உண்மையை நாம் புரிந்து கொள்ளவேண்டும். இயற்கை விவசாயத்தை பின்பற்ற வேண்டும்.

நன்றி! வாழ்க வளமுடன் ! வாழ்க வையகம்!

Bigrock

நவீன உழவாண்மை சீரழிவு - நம்மாழ்வார்
சிறுநீரக நோயின் அறிகுறிகள்