நவகிரகங்கள் பற்றி அறிவோம்

சூரிய தேவன்

சூரியன் நவகிரகங்களில் முதன்மையானவர் ஆவார். உலகில் அசையும் பொருட்கள், அசையா பொருட்கள் ஆகிய எல்லாவற்றுக்கும் ஆத்மகாரனாக விளங்குவார்.

ஜோதிட விதிப்படி சூரியனை பிதுர் காரகன் சுய நிலை, சுய உணர்வு, செல்வாக்கு, உயர்வு, வீரம், பராக்கிரமம், நன்னடத்தை ஆகியவற்றை குறிக்கும், கண், ஒளி, உஷ்ணம், அரசு ஆதரவு இவற்றின் அதிபதியும் சூரிய பகவானே ஆவார்.

திசை – கிழக்கு
அதிதேவதை – அக்னி (ருத்திரன்)
தலம் – சூரியனார் கோயில்
ரத்தினம் – மாணிக்கம்

சந்திர பகவான்

சந்திர தேவன் இவருக்கு சோமன் என்ற பெயரும் உண்டு. இவரே உடல் பலம், மனோ பலம் இரண்டிற்கும் காரணி ஆவார். ஒருவர் ஜாதகத்தில் லக்கின சரியாக அமையவில்லை என்றால் சந்திரனை லக்கினமாக கொண்டு ஜாதகத்தை கணக்கிடலாம்.

கடல் வழி பயணங்கள், ரசனை, அறிவு, ஆனந்தம், புகழ், அழகு, வாழ்க்கையில் சுகபோகங்கள் அனைத்திற்கும் காரகன் ஆவார்.

திசை – தென்கிழக்கு
தலம் – திங்களூர்
நிறம் – வெள்ளை
ரத்தினம் – முத்து

செவ்வாய் பகவான்

அங்காரகன் என்றால் சிவப்பு நிறத்தவன் என்று பொருள். இவரே போர்க் கடவுளாகவும், பூமாதேவியின் மகனாகவும் கருதப்படுகின்றார். சோதிடத்தின் படி செவ்வாய் பகவான், மேடம் மற்றும் விருச்சிகம் ஆகிய இராசிகளுக்கு சொந்தக்காரர் ஆவார்.

சகோதர காரகன், உடல் உறுதி, வலிமை, மன உறுதி, விளையாட்டு, எரிபொருள், உஷ்ணம், கோபம் ஆகியவற்றிற்கும் காரகன் இவரே. மிகப்பெரும் படைகளை தலைமை தங்குபவன் இவரே.

திசை – தெற்கு
ரத்தினம் – பவளம்
அதிதேவதை – அங்காரகன் முருகப் பெருமான்
தலம் – வைத்தீஸ்வரன் கோயில்

புதன் பகவான்

இவர் நிலாவின் (தாராவுடன் அல்லது ரோகினியுடன்) மகனும் ஆவார். இவர் வணிகர்களின் கடவுளும் அவர்களின் பாதுகாப்புமாகும்.

இவரே வித்யாகாரகன் கணிதம், ஜோதிடம், ஆளுமை, வியாபார திறன், புத்தகம் எழுதுதல், நாடகம், நடனம் ஆகிய அனைத்திற்கும் அதிபதி ஆவார். நம் உடலில் நரம்பு மண்டலத்தின் ஆதாரம் இவரே.

திசை – வடகிழக்கு
தலம் – திருவெண்காடு
ரத்தினம் – முத்து
அதிதேவதை – ஸ்ரீ விஷ்ணு பகவான்

வியாழ பகவான்

இவரே தேவர்களின் குரு. இவர் சப்தரிஷிகளில் ஒருவரான ஆங்கிரச முனிவரின் மகனாவார். இவர் நான்கு வேதங்களையும், அறுபத்து நான்கு கலைகளையும் அறிந்தவர். எண்ணற்ற யாகங்களையும் செய்து தேவர்களின் குருவாக மாறினார்.

குரு பார்த்தால் கோடி நன்மை ஒருவர் ஜாதகத்தில் எவ்வளவு தீய கிரகங்களின் ஆதிக்கங்கள் இருந்தாலும் குரு பார்க்க அனைத்தும் விலகும். அந்தணர் பசுக்களுக்கு அதிபதி. குரு மஞ்சள் நிறத்தை உடையவன். உடல் உறுப்புகளில் சதையை குறிக்கும் மற்றும் புத்திகாரகன் இவரே. ஒரு ஜாதகத்தில் குருவின் அமைப்பை வைத்தே ஜாதகரின் யோக்கியத்தன்மையை அறிய இயலும்.

திசை – வடக்கு
தலம் – ஆலங்குடி
அதிதேவதை – இந்திரன்
ரத்தினம் – புஷ்பராகம்

சுக்கிர பகவான்

சுக்ரன் பகவான் பிருகுவின் மகன். வெள்ளி கோள் எனவும் அழைக்கப்படுகிறது. சுக்கிரன் என்பதற்கு தெளிவு, தூய்மை, பிரகாசம் ஆகியவற்றுக்கான அதிபதி.

64 வித கலைகள், காதல், வாழ்க்கையில் அனைத்து சுக போகங்களுக்கும் அதிபதி இவராவார். ஜனன உறுப்புகளை காப்பவர் இவரே, சிற்றின்பத்தை குறிப்பதும் இவரே. உடலின் வீரியம், பொன்பொருள் ஆபரணம் சேர்க்கை அனைத்திற்கும் அதிபதி.

திசை – கிழக்கு
அதிதேவதை – இந்திராணி
ரத்தினம் – வைரம்
வாகனம் – கருடன்

சனி பகவான்

இவர் சூரிய தேவன் மற்றும் சாயா தம்பதியினருக்கு பிறந்தவர், யமனின் தமயன் காகத்தினை வாகனமாக கொண்டவர். இவருடைய கால் சிறிது உனமென்றும் கூறப்படுகிறது.

ஒரு ஜாதகத்தில் ஆயுள் மற்றும் மரணத்தை குறிப்பது இவரே. சனி அசுபனாக இருந்த அவர் அனைத்து வித துன்பங்களையும் அனுபவிக்க வேண்டி வரும். அதுவே நல்ல பலம் பெற்றிருந்தால் சுகபோகங்களை அள்ளித் தருவார்.

உடலில் நரம்பு மண்டலத்தை குறிக்கும். இரும்பு இயந்திரம் சம்பத்தப்பட்ட துறைக்கு அதிபதி இவர்.

திசை – மேற்கு
தலம் – திருநள்ளாறு
அதிதேவதை – யமன்
ரத்தினம் – நீலக்கல்
வாகனம் – காகம்

இராகு பகவான்

சாய கிரகம் அல்லது நிழல் கிரகம் என்று அழைக்கப்படுபவர் இராகு. திருமால் அமிர்த கரண்டியால் அமிர்தம் குடித்த அசுரனின் தலையை வெட்டியதால், அவ்வசுரனின் உடல் இரண்டாக பிளவுபட்டது. அமிர்தம் குடித்த முண்டத்துடன் கூடிய பகுதி கேதுவாகவும், தலையுடன் கூடிய பகுதி இராகுவாகவும் மாறியது.

அரசாங்கத்தில் பதவி மற்றும் புகழ் நிலைத்து இருக்க இராகுவின் அமைப்பு நன்றாக இருக்க வேண்டும். வெளிநாடு செல்லுதல், சூதாட்டம், திடீர் பணவரவு, அதிர்ஷ்டம், திடீர் பணக்காரன் ஆகிய அனைத்திற்கும் அதிபதி இவரே ஆவார்.

திசை – தென்மேற்கு
தலம் – திருநாகேஸ்வரம்
அதிதேவதை – துர்கை காளி
ரத்தினம் – கோமேதகம்

கேது பகவான்

நிழல் கிரகமாக கருதப்படுகின்ற கேது மனித வாழ்விலும் படைப்பிலும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இவரே ஞான காரகன் ஆவார். விஞ்ஞானம் மெய்ஞானம் இரண்டிற்கும் காரகன் ஆவார். சாயா கிரகங்கள் சொந்த வீடு இல்லாதவை. இவை எந்த வீட்டில் இருக்கின்றதோ அந்த வீட்டின் பலனை தருவார்கள்.

திசை – வடமேற்கு
அதிதேவதை – சித்திரகுப்தன்
ரத்தினம் – வைடூரியம்
தலம் – கீழப்பெரும்பள்ளம்

நன்றி !! வாழ்க வளமுடன் !! வாழ்க வையகம் !!

சதுரகிரி: சித்தர்கள் பூஜிக்கும் சிவன்மலை
உலக நீதி விளக்கம்