திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்

திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்

இந்த பதிவில் திராட்சை பயன்கள் பற்றி பார்ப்போம். திராட்சை என்றதும், சுவை மிகுதியாக உள்ள விதை இல்லாமல் விற்கும் திராட்சையை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. விதை உள்ள திராட்சையையே பயன் படுத்துங்கள்.

சத்துக்கள்

திராட்சையில் வைட்டமின் ஏ சத்து அதிகமாக உள்ளது. இரும்பு சத்து, தாமிர சத்துகள் நிறைந்துள்ளன.

வைட்டமின்கள் பி1, பி6, கே, சி, மாங்கனீசு மற்றும் பொட்டாசியமும் அதிகமாக உள்ளது.

Amazon: Laptops Year end deals

பலன்கள்

வயிற்றில் ஜீரணக்கோளாறு உள்ளவர்கள் திராட்சைப்பழத்தை அடிக்கடி உண்டுவர நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

ஒரு சிலர் எப்பொழுதும் பசி இல்லாமல் இருப்பார்கள், அவர்கள் அடிக்கடி திராட்சையை சாப்பிட குடலில் உள்ள குற்றங்களை நீக்கி, பசியை தூண்டும்.

நாக்கு வறட்சியாக உள்ளவர்களுக்கு திராட்சை ஜூஸ், வெந்நீருடன் கலந்து குடிக்க நாவறட்சி சரியாகுவதோடு காய்ச்சலும் நிற்கும்.

திராட்சை பழத்துடன் சிறிது மிளகு சேர்த்து நன்றாக அரைத்து சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் குணமடையும்.

நீர்த்தாரை எரிச்சல், நீர் பிரிதல் போன்ற குற்றங்கள் அனைத்தும் அடிக்கடி திராட்சை பழம் சாப்பிட்டு வர குணமாகும்.

பயணத்தின் பொழுது ஏற்படும் உடற்சூடு மற்றும் அசதிக்கும் இது நல்லது.

உடலில் ஏற்படும் புண்கள் குணமாக
கறிவேப்பிலை நெல்லிப்பொடி செய்முறை