சுவையான திணை அரிசி பாயசம்

தினை அரிசி பாயசம்
தேவையானவை

தினை அரிசி –             1கப்
முந்திரி பருப்பு –          7
பாதாம் பருப்பு –         10
பால் –                             2கப்
வெல்லம் –                   100 – 150 கிராம்
குங்குமப்பூ –               சிறிதளவு
நெய் –                           தேவையான அளவு
துருவிய தேங்காய் – சிறிதளவு
ஏலக்காய் –                 3 தட்டி கொள்ள வேண்டும்.

Amazon: Laptops Year end deals

செய்முறை

முதலில் திணை அரிசியினை நன்றாக வாசம் வரும் வரையில் கிடாயில் வருத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனை பாலுடுன் நீரும் சேர்த்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். முந்திரி பருப்பு பாதாம் பருப்பு இரண்டையும் ஊற வைத்து அரைத்து அதனுடன் பால் மற்றும் வெல்ல கரைசலில் சேர்த்து எடுத்து கொள்ள வேண்டும்.

பிறகு இந்த கலவையையும் வேக வைத்த திணை அரிசி கலவையுடன் (திணை அரிசியினை நன்றாக கரண்டியினால் மசித்து கொள்ள வேண்டும்.) சேர்த்து நன்றாக கொதிக்க வையுங்கள். கொதித்த பின்பு குங்குமப்பூவை சிறிதளவு பாலில் சேர்த்து இறக்கி வைக்க வேண்டும். மீதமுள்ள முந்திரி பருப்பு, ஏலக்காய் நெய்யில் வறுத்து எடுத்து இதனுடன் சேர்க்க வேண்டும். இறுதியாக துருவிய தேங்காயை சேர்க்க வேண்டும். இப்போது சுவையான திணை அரிசி பாயசம் ரெடி.

ஆரோக்கியமான மிளகு சூப்
ருசியான மீல்மேக்கர் கோளா உருண்டை