தவலை வடை செய்முறை

Thavala Vadai

தவலை வடை செய்முறை

தேவையானவை

பச்சரிசி – 1/2 டம்ளர்
கடலை பருப்பு – 1/2 டம்ளர்
பாசிப்பருப்பு – 1/2 டம்ளர்
துவரம்பருப்பு – 1/2 டம்ளர்
உளுத்தம் பருப்பு – 1/2 டம்ளர்
ஜவ்வரிசி – 3 டீஸ்பூன்
தேங்காய் பல் – சிறிதாக நறுக்கிய 2 சில்கள்
காய்ந்த மிளகாய் – 7
இஞ்சி – 1டீஸ்பூன் (சிறிதளவு)
பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கி கொள்ளவும்
மல்லித்தழை – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயம் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

Amazon Year end offer Mobiles

செய்முறை

அரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு ஆகிய மூன்றையும் ஒன்றாக ஊற வையுங்கள். உளுத்தம்பருப்பு பாசிப்பருப்பு தனியாக ஊறவைத்துக்கொள்ளுங்கள். அதே போன்று ஜவ்வரிசியையும் தனியாக ஊற வைத்துக்கொள்ளுங்கள். சுமார் 1 முதல் 2 மணி நேரம் வரை ஊறிய பின்பு அரிசி கலவையுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து சொரசொர என்று அரைத்து கொள்ளுங்கள்.

Amazon Year end offer Laptops

ஊறிய பருப்புகளை சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். ஜவ்வரிசியையும் தனியாக அரைத்து மாவில் சேர்த்துக்கொள்ளவும்.

அரைத்த மாவில் கறிவேப்பிலை, பெருங்காயம், பச்சை மிளகாய், தேங்காய், இஞ்சி மற்றும் உப்பு சேர்த்து சற்று கட்டியான பதத்துடன் கலக்கி கொள்ளவும். ஒரு கிடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து மாவுடன் சேர்த்து கொள்ளுங்கள். பிறகு எண்ணெயை கிடாயில் காய வைத்து மாவை தட்டி போட்டு எடுங்கள். சுவையான தவலை வடை தயார்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

இனிமையான ரெசிபி ஆரஞ்சு பாயசம்
எள்மிளகாய் பொடி செய்முறை