தலைமுடி பாதுகாக்க பாரம்பரிய முறை

தலைமுடி பாதுகாக்க பாரம்பரிய முறை

தலைமுடியை நன்றாக பாதுகாக்க தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். இரவில் தூங்கும் முன்பு தேங்காய் எண்ணெயை இளம் சூடான பதத்திற்கு காய்ச்சி தலையில் நன்றாக தடவி பின் காலையில் எழுந்து தலையை அலசினால் தலையில் ஏற்பட்ட பிளவு மற்றும் பொடுகுகளை அழிக்கும். வாரம் ஒரு முறை இதை செய்து பயன் பெறுக.

வாரம் ஓருமுறை வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் ஊற வைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரைக் கொண்டு தலையை அலசி வந்தால் முடி கொட்டுவது படிப்படியாக குறையும்.

Amazon: Laptops Year end deals

அல்லது ஒரு கைப்பிடி வேப்பிலையை எடுத்து அரைத்து தலையில் தடவி 15-20 நிமிடங்கள் கழித்து தலையில் அலசினால் முடி உதிர்வது படிப்படியாக குறையும்.

இரவில் வெந்தயம் ஒரு டீஸ்பூன் எடுத்து தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலை அதனை அரைத்து எடுத்து தலையில் தடவவும். குறைந்தது 1 மணி நீரால் ஊற விடவும். பிறகு கடலைமாவு கொண்டு தலையை அலசவும்.

தலைமுடி இயற்கை நிறம் பெற

ஒரு சிறு துண்டு சோற்றுக் கற்றாழையின் உள்ளிருக்கும் ஜெல் போன்ற பகுதியையும் சிறிது மருதாணி இலையையும் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து ஒரு 15 – 30 நிமிடங்கள் ஊற வைத்து பின் தலையை அலசிக் கொள்ளுங்கள். இதுபோல நான்கு ஐந்து நாட்களுக்கு ஒருமுறை குளித்து வந்தால் தலைமுடி நிறம் பிரவுன், சிவப்பு மற்றும் கருப்பு நிறமாக மாறும்.

வழுக்கை தலையில் முடி வளர

கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

தலைமுடி கருமையாக

நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

நெல்லிக்காயை காயவைத்து பொடி செய்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

செம்பட்டை முடி நிறம் மாற

மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

தலைமுடி நரை மாற

முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

தலைமுடி வளர்வதற்கு

கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

முகப்பொலிவு உடல் அழகு பெற
சளி இருமல் தீர வீட்டு வைத்தியம்

2 comments

  • அருமையான செய்தி !

    தங்கள் கூறிய அனைத்தும் இயற்கை மருத்துவம் என்பதால் நானும் எனது அணைத்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பரிந்துரைக்கிறேன்.

    மேற்சொன்ன குறிப்புகளை முயற்சி செய்து விட்டு அதன் பிரதிபலன்களை உங்களுக்கு தெரிவிக்கிறேன்.

    நன்றி !வாழ்க வளமுடன் !

  • SELVAKUMAR

    Very useful information THANKS