ஜோதிடம் அடிப்படை விதிகள்

ஜோதிடம்

ஜோதிடம் விதிகள் பார்க்கும் பொழுது ராசி என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் லக்கினம் என்பது தான் ஜாதகத்தின் முதல் வீடாகும். லக்கினத்தில் இருந்தே மற்ற கிரகங்களின் இடங்கள் கணக்கிடப்படுகின்றன. லக்கினம் தான் ஜாதகரின் குணாதிசியத்தை நிர்ணயிக்கிறது.

ராசி அதிபதிகள்

எந்தெந்த ராசிக்கு யார் யார் அதிபதி என்று பார்ப்போம்.
மேஷம், விருச்சிகம் – செவ்வாய் அதிபதி
ரிஷபம், துலாம் – சுக்ரன் அதிபதி
மிதுனம், கன்னி – புதன் அதிபதி
கடகம் – சந்திரன் அதிபதி
சிம்மம் – சூரியன் அதிபதி
தனுசு, மீனம் – குரு அதிபதி
மகரம், கும்பம் – சனி அதிபதி

Amazon: Laptops Year end deals

ராகு மற்றும் கேது இரண்டிற்கும் சொந்த வீடுகள் இல்லை இவை நிழல் கிரகங்கள். இவை எந்த ராசியில் நிற்கின்றதோ அதுவே அவர்களுக்கு சொந்த வீடுகள்.

கிரகங்களின் ஆட்சி உச்சம் நீசம்

கிரகங்கள் அவைகளின் சொந்த வீட்டில் இருக்கும் பொழுது முழு பலத்துடன் இருக்கும். இவ்வாறு சொந்த வீட்டில் இருந்தால் கிரகத்தின் ஆட்சி வீடு என்போம். சாதரணமாக ஒரு கிரகத்துக்கு பலம் ஒரு மடங்குனா ஆட்சி வீட்டில் 2 மடங்குகள் ஆகும்.

அதை போன்றே கிரகங்கள் உச்சம் பெற்று இருந்தால் அவை பல மடங்கு பலத்துடன் இருக்கும். நீசம் அடைந்து இருந்தால் கிரகங்கள் பலம் இழந்து இருக்கும்.

உச்ச வீடுகள்

மேஷம் – சூரியன் உச்சம்
ரிஷபம் – சந்திரன் உச்சம்
கடகம் – குரு உச்சம்
கன்னி – புதன் உச்சம் (ஆட்சியும் கூட)
துலாம் – சனி உச்சம்
மகரம் – செவ்வாய் உச்சம்
மீனம் – சுக்ரன் உச்சம்

நீச வீடுகள்

ஒரு கிரகம் உச்சம் பெற்ற வீட்டில் இருந்து 7 வது வீட்டில் நீசம் அடையும். இப்போது சூரியனுக்கு மேஷம் உச்ச வீடு, எனில் மேஷத்திலிருந்து கணக்கிட்டு 7 வது வீடு துலாத்தில் நீசம் அடைவார். ஆகா துலாம் சூரியனுக்கு நீச வீடாகும். இதை போன்றே மற்ற கிரகங்களையும் கணக்கிட வேண்டும்.

நட்பு பகை சமம்

ஒவ்வொரு கிரகத்திற்கும் நட்பு பகை சமம் மூன்று பண்புகள் இருக்கும். அவற்றை பின்வரும் Chart ல் தெளிவு படுத்துகிறேன்.

horoscope chart

நட்பு பகை சமம்

ராசிகள் மற்றும் நட்சத்திரங்கள்

மேஷம் – அசுவினி, பரணி, கார்த்திகை 1-ஆம் பாதம்
ரிஷபம் – கார்த்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரிஷம் 2-ஆம் பாதம் முடிய
மிதுனம் – மிருகசிரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய
கடகம் – புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய
சிம்மம் – மகம், பூரம் உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
கன்னி – உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய
துலாம் – சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய
விருச்சிகம் – விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய
தனுசு – மூலம், பூராடம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
மகரம் – உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய
கும்பம் – அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய
மீனம்- பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய

நட்சத்திரங்களும் நட்சத்திர அதிபதிகளும்

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் – சூரியன்
ரோகிணி, அத்தம், திருவோணம் – சந்திரன்
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் – செவ்வாய்
திருவாதிரை, சுவாதி, சதையம் – இராகு
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி – குரு
பூசம், அனுசம், உத்திரட்டாதி – சனி
ஆயில்யம், கேட்டை, ரேவதி – புதன்
மகம், மூலம், அசுவினி – கேது
பரணி, பூரம், பூராடம் – சுக்கிரன்

நாம் எந்த ஜாதகத்தில் பிறந்தாலும் பிறந்த நட்சத்திர அதிபதியின் தசைதான் உங்களுக்கு முதலில் ஆரம்பிக்கும். உதாரணமாக நான் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறக்கிறேன் என்றால் அதற்கு அதிபதி சூரியன் ஆவார். எனவே என்னுடைய ஜாதகம் சூரிய தசையிலிருந்து தொடங்கும். ஆனால் சூரிய தசையில் எத்தனையாவது மாதம் வருடம் என்று ஜாதகம் கணிப்பவரிடமே சென்று காண வேண்டும்.

கிரகங்களும் தசையின் கணக்கும்

கேது – 7 வருடங்கள்
சுக்ரன் – 20 வருடங்கள்
சூரியன் – 6 வருடங்கள்
சந்திரன் – 10 வருடங்கள்
செவ்வாய் – 7 வருடங்கள்
இராகு – 18 வருடங்கள்
குரு – 16 வருடங்கள்
சனி – 19 வருடங்கள்
புதன் – 17 வருடங்கள்

ஒரு இக்கிரக சுற்றுகள் முடிய 120 வருடங்கள் ஆகின்றது. இதையே மனிதனின் முழு ஆயுள் காலம் என்று முன்னர் கணித்திருந்தனர்.

திருமண பொருத்தங்கள் பார்க்கும் முறை
12 ராசிகளும் உடல் பாகங்களும்

One comment

  • ஜோதிடம் என்பது அனைவருக்கும் புரியாத புதிர் ஆக இருப்பது .இதை இவ்வளவு எளிமையாக அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் தந்தமைக்கு உங்களுக்கு என் இனிய நல்வாழ்த்துக்கள்! மேலும் இதை பற்றிய அதிகமான செய்திகளை உங்களிடம் இருந்து எதிர் பார்க்கின்றோம்.

    நன்றி !

    வாழ்க வளமுடன் !