ஜப்பான் ஆம்லெட்

ஜப்பான் ஆம்லெட்
தேவையானவை

முட்டை – 3
தக்காளி – 350 கிராம்
உருளைக்கிழங்கு- 500 கிராம்
வெங்காயம் – 100 கிராம்
குடைமிளகாய் – 2
பால் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
தக்காளி சாஸ் – 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்
நெய் – 25 கிராம்

Amazon: Laptops Year end deals

செய்முறை

தக்காளி, வெங்காயம், குடைமிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வேகவையுங்கள். உருளைக்கிழங்கை வேகவைத்து தோலை நீக்குங்கள். முட்டையை அடித்து கலக்கி மிக்ஸியில் ஒருமுறை அடித்து தனியாக ஊற்றி வையுங்கள். பின் அதனுடன் பால், தக்காளி சாஸ், உப்பு, மிளகு தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்குங்கள்.

வாணலியில் நெய்யை விட்டு சூடாக்குங்கள். அதில் காய்கறிகளை கொட்டி 5 நிமிடம் சூடாக்குங்கள். அதன்மேல் முட்டை கலவையை கொட்டி அடைத்து வையுங்கள். பொன்னிறம் வரும்பொழுது, தேவைக்கேற்ப வெட்டி எடுத்து சுவைக்கலாம். தேவைப்பட்டால் அதன்மீது உருளைக்கிழங்கு வட்டமாக நறுக்கி அதன் மேல் வைத்து அலங்கரிக்கவும்.

டேஸ்டான முட்டை வெஜ் ஆம்லெட்
புதுமையான டிஷ் 'முட்டை இட்லி'