சௌசௌ கூட்டு

சௌசௌ கூட்டு

சௌசௌ கூட்டு

தேவையானவை

சௌசௌ- 1 கப் பொடியாக நறுக்கிய
பச்சை மிளகாய் – 2
சீரகம் – 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டிஸ்போன் வறுத்தது
தேங்காய் துருவல் – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பாசிப்பருப்பு – 1/4 கப்

Amazon: Trending Smartphones Collection

தாளிக்க

கடுகு – 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு- 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 2 ஓடித்தது.

செய்முறை

முதலில் பாசிப்பருப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்க வேண்டும். முக்கால்பாகம் வெந்ததும் நறுக்கி வைத்திருந்த சௌசௌ மற்றும் உப்பு சேர்க்கவும். கலவை நன்றாக வெந்ததும் தேங்காய் துருவல் வறுத்த உளுத்தம்பருப்பு பச்சை மிளகாய் சீரகம் ஆகியவற்றை அரைத்து காயுடன் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். கடைசியாக பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கிவைக்கவும்.

எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து சமைத்த கூட்டில் சேர்க்கவும். சுவையான சௌசௌ கூட்டு ரெடி.

நன்றி! வாழ்க வளமுடன் ! வாழ்க வையகம்!

Bigrock

சண்டே ஸ்பெஷல் கேரட் அல்வா
காரக்குழம்பு பொடி