சேப்பங்கிழங்கு சாப்ஸ்

சேப்பங்கிழங்கு சாப்ஸ்

சேப்பங்கிழங்கு சாப்ஸ்

தேவையானவை

சேப்பங்கிழங்கு – 1/4 கிலோ
கார்ன் பிளவர் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

Amazon Offers: Top Brands Home Furnishing

அரைக்க

மிளகு – 1/2 டீஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ்பூன்
பூண்டு – 5 பல்
இஞ்சி – ஒரு சிறு துண்டு
பட்டை – 1

சேப்பங்கிழங்கு சாப்ஸ் செய்முறை

முதலில் மேலே அரைக்க கூறிய பொருட்களை நன்றாக அரைத்துக்கொள்ளவும். சேப்பங்கிழங்கை தோல் உரித்து நீளவாக்கில் கட் செய்து குழைத்து விடாமல் வேகவைக்கவும்.

அரைத்து வைத்துள்ள மசாலா உப்பு, கார்ன் பிளவர் ஆகியவற்றை கிழங்கில் சேர்த்து பிசறி காயும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து சுவையுங்கள். சுவையான சேப்பங்கிழங்கு சாப்ஸ் ரெடி.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெந்தயக்கீரை சப்பாத்தி
பசலைக்கீரை பூரி