சண்டே ஸ்பெஷல்: செட்டிநாடு கோழிக்கறி

செட்டிநாடு கோழிக்கறி
தேவையானவை

கோழி – 1
வெங்காயம் – 20 கிராம்
தக்காளி – 20 கிராம்
காய்ந்த மிளகாய் – 10 எண்ணிக்கை
சோம்பு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 10 கிராம்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

Amazon: Laptops Year end deals

செய்முறை

கோழியை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக போட்டுக்கொள்ளவும். பின் துண்டுகளில் மஞ்சள் தூள் தடவி எடுத்து வைத்துக்கொள்ளவும். வெங்காயத்தையம், தக்காளியையும், சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். சோம்பு மற்றும் காய்ந்த மிளகாய் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு அடுப்பில் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். பொன்னிறத்தில் வந்ததும், அரைத்து வைத்த விழுது மற்றும் தக்காளியை துண்டுகளையும் போடவும். சிறுது நேரத்தில் மசாலா வாசனை வந்ததும் கோழி துண்டுகளை போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விடவும். கடைசியாக உப்பு சேர்த்து நன்றாக கிளறி மூடி அடுப்பை லேசாக எரிய விடவும்.

கோழிக்கறி வெந்து தண்ணீர் சுண்டியதும் இறக்கி வைத்து சுவைக்கலாம்.

சுவையான முட்டை மசாலா இடியாப்பம்
டேஸ்டான முட்டை வெஜ் ஆம்லெட்