சுவையான வெஜிடபிள் இட்லி

வெஜிடபிள் இட்லி
தேவையானவை

வெஜிடபிள் இட்லி

இட்லி மாவு – 4 கப்
காய்கறிகள் – 1/2 கப் (பொடியாக நறுக்கவும்)
தேங்காய் துருவல் – 1/4 மூடி (சற்று குறைவு)
பாசிப்பருப்பு – 4 டீஸ்பூன் (வேகவைத்து கொள்ளவும்)
மல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

தாளிக்க

கடுகு உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
கடலை பருப்பு – 2 டீஸ்பூன்
இஞ்சி – சிறுதுண்டு (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)
கறிவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயம் – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் கிடாயில் எண்ணெயை காயவைத்து அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை அனைத்தையும் கிடாயில் போட்டு வதக்குங்கள். இறுதியாக தேங்காய் துருவல், மல்லித்தழை சேர்த்து இறக்கி வேகவைத்த பாசிப்பருப்பை சேருங்கள்.

இந்த கிடாயில் உள்ளவைகளை அப்படியே இட்லி மாவு பாத்திரத்தில் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பிறகு இட்லி தட்டுகளில் ஊற்றி வேகவிட்டு எடுத்து சுவைக்கலாம். வெஜிடபிள் இட்லி தயார்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

பசலைக்கீரை பூரி
மரவள்ளி கிழங்கு தோசை