சிறுநீரகத்தின் செயல்பாடுகள்

சிறுநீரகம்
செயல்பாடுகள்

சிறுநீரகத்தின் செயல்பாடுகள்: நாம் தினசரி உண்ணும் உணவுகளில் நீரின் அளவு, உப்புகளின் அளவு, அமிலங்களின் அளவினை கட்டுக்குள் வைத்திருக்கும்.

உண்ணும் உணவுப்பொருட்களை உடலுக்கு தேவையான சக்தியாக மாற்றி வருகிறது.

உடலில் தாங்கும் தேவையற்ற கழிவுப்பொருட்கள், உணவுப்பொருளில் கலந்திருக்கும் நச்சுத்தன்மையையும் சிறுநீர் வழியே அகற்றும்.

Amazon Year end offer Mobiles

சிறுநீரகங்கள் புதிய புதிய ஹார்மோன்களை உருவாக்கி உடலில் திரவங்களையும், அமிலங்களையும் சமநிலை படுத்திகொண்டு செல்கின்றன.

இதனுடைய முக்கிய வேலை இரத்தத்தை சுத்திகரித்து தேவையற்ற கழிவுகளை சிறுநீர் வழியே வெளியேற்றும்.

Amazon Year end offer Laptops

கிரியாடின் மற்றும் யூரியா என்னும் இரு உப்புகள் மிக முக்கியமான கழிவுப்பொருள்கள். இரத்தத்தில் இவை கலந்துள்ள அளவே சிறுநீரகத்தின் செயல்பாட்டை குறிக்கும். இவை அதிகரித்தால் சிறுநீரகம் பாதிப்படையும்.

மனித உடலில் நீரின் சமநிலையை சிறுநீரகங்கள் பாதுகாத்து வருகின்றன. சிறுநீரகம் பதிப்படையும்பொழுது உபரி நீர் உடலிலேயே தங்கி விடுகின்றது. அதனால்தான் உடல் உறுப்புகளில் வீக்கம் ஏற்படுகின்றது.

சிறுநீரகத்தின் முக்கிய வேலை உடலில் தங்கியிருக்கும் தாது உப்புக்களை நீக்குவதாகும். உதாரணம் உடலில் சோடியம் அளவு மாறினால் ஒருவரின் நினைவு பாதிக்கும். பொட்டாசியத்தின் அளவு மாறினால் இதயம் வேகமாக துடிக்கும். இதேபோன்று கால்சியம் அளவு மாறினால் எலும்புகள், பற்களை பாதிக்கும்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

பற்கள் பாதுகாக்க எளிய வைத்தியம்
சரும நோய்கள் குணமாக