சளி இருமல் தீர வீட்டு வைத்தியம்

சளி இருமல்
திரிகடுகம் என்னும் முக்கடுகு

சுக்கு மிளகு திப்பிலி சம அளவு எடுத்துக்கொண்டு பொடி செய்து கொள்க. பொடி செய்யுமுன் மிளகை 24 மணி நேரம் மோரில் ஊற வைத்து பின் வெயிலில் உலர வைத்து எடுத்துக்கொள்ளவும். சுக்கை அதன் தோல் நீக்கி எடுத்துக்கொள்ளவும். திப்பிலியை தீயாமல் சற்று வதக்கிக்கொள்ளவும்.

Amazon: Laptops Year end sale

திரிபலை என்னும் முப்பாலை

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இவற்றை சம அளவு எடுத்து பொடித்து சலித்து கொள்ளவேண்டும்.

பயன்படுத்தும் முறை

திரிகடுகு மற்றும் திரிபலை இரண்டையும் சம அளவு எடுத்துக் கொண்டு 2 அல்லது 3 டீஸ்பூன் தேன் சேர்த்து நீரில் கலந்து கொதிக்க வைத்து அருந்த வேண்டும். இவ்வாறு குடிப்பதால் குறிப்பாக சளி, இருமல், மலச்சிக்கல், வயிற்றுப்புண், தொண்டைப்புண் போன்ற நோய்கள் சரியாகும். மேலும் இது எல்லா நோய்களுக்கும் துணை மருந்தாக கொடுக்கலாம்.

Buy Health care devices through Amazon

தலைமுடி பாதுகாக்க பாரம்பரிய முறை
ஆரோக்கியமான பயத்தம்பருப்பு கஞ்சி

One comment