சரும நோய்கள் குணமாக

தேமல் படர்தாமரை பிரச்சனை

சரும நோய்கள் குணமாக: சந்தனக்கட்டையை எலுமிச்சை சாற்றில் உரைதது தடவ பிரச்சினை குணமாகும்.

பூவரசு காய் சாறு பிழிந்து அந்த சாற்றை படர்தாமரை மேல் தடவினால் மறைந்து போகும்.

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து தினசரி குளித்து வந்தால் தேமல் மறையும்.

Amazon Year end offer Mobiles

தேமல் குணமாக நாயுருவி இலையை சாறு பிழிந்து தடவினால் குணமாகும்.

சொறி சிரங்கு பிரச்சினை

சொறி மற்றும் சிரங்கு குணமாக துளசி இலையை அரைத்து பூசி குளிக்க வேண்டும்.

அருகம்புல் தைலம் தேய்த்து குளித்தால் சொறி சிரங்கு குணமாகும்.

நுனா இலையை அரைத்து பற்று போட்டால் தோலில் ஏற்பட்டுள்ள புண், சிரங்கு குணமாகும்.

கொன்றைவேர் வாங்கி கஷாயம் வைத்து குடிக்க சொறி சிரங்கு குணமாகும்.

நிலாவரை கஷாயம் தடவி வர ஆறும்.

Amazon Year end offer Laptops

மற்ற தோல் பிரச்சினைகள்

மஞ்சள் மற்றும் வேப்பிலையை அரைத்து பூச எல்லாவித தோல் வியாதிகளும் குணமாகும்.

தினசரி அக்குள் பகுதியை இரு முறை தண்ணீரில் கழுவ வேண்டும்.

சீலைப்பேன் அழிய வசம்பு மற்றும் நாய் துளசி இலை சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசியபின் குளிக்கலாம்.

தோலில் ஏற்படும் பிரச்சினைகள் தீர நன்னாரிவேர் கஷாயம் சாப்பிட்டு வரலாம்.

சாதம் வடித்த காஞ்சியை உடல் முழுக்க தடவி குளித்து வரலாம்.

உடல் நாற்றம்

உடலில் ஏற்படும் வாடை நீங்க வாரம் இரு முறை பற்பாடகம் இலையை பாலில் அரைத்து பூசி குளித்தால் குணமாகும்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சிறுநீரகத்தின் செயல்பாடுகள்
கால் ஆணிக்கு வைத்தியம்