சண்டே ஸ்பெஷல் கேரட் அல்வா

Carrot Halwa
தேவையானவை

கேரட் – 1/2 கிலோ (துருவியது)
பால் – 1 லிட்டர்
சர்க்கரை – 250 கிராம்
கோவா – 250 கிராம்
ஏலக்காய் – 5
நெய் – 3 டீஸ்பூன்
முந்திரி பருப்பு – 5 உடைத்தது

செய்முறை

முதலில் கேரட்டை சுத்தம் செய்து துருவிக் கொள்ளவும். அடுப்பில் பாலை வைத்து காய விடவும், பால் பொங்கும் பொழுது கேரட் துருவலை போட்டு சிறு அனலில் கொதிக்க விடவும். கேரட் பாலில் வெந்ததும் சர்க்கரை மற்றும் கோவா கரைத்து கேரட்டுடன் கலக்கவும்.

முந்திரி பருப்பு ஏலக்காய் நெய்யில் வறுத்து பின் கேரட் கலவையுடன் சேர்த்து கிளறி, ஆறியவுடன் பரிமாறவும். சுவையான கேரட் அல்வா தயார்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

Bigrock

நவதானிய தோசை
சௌசௌ கூட்டு