குழந்தை வளர்ப்பு உளவியல் ஆய்வு

குழந்தை வளர்ப்பு உளவியல் ஆய்வு

இன்றைய சூழலில் குழந்தை வளர்ப்பு என பார்க்கும்பொழுது பெற்றோர்களுக்கு குழந்தைகளுடன் பேசவோ, அவர்களின் செயல்களை புரிந்து கொள்ளவோ, விளையாடவோ, நேரம் ஒதுக்க முடியவில்லை. இது அக்குழந்தையை உளவியல் ரீதியான பிரச்னையை உருவாக்கும். பிரச்சனை வந்தபின் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று அக்கறையுடன் கவனிப்பதில் எவ்வித பயனுமில்லை.

சிறுவயதிலேயே குழந்தைகளுக்கும், உங்களுக்கும் இடைவெளியை உருவாக்கிவிட்டு பின்னர் வயதான பின் தம்மை விட்டு விட்டதாக கூறி வருத்தமடைவதில் பயனில்லை.

வளரும் பருவத்தில் குழந்தைகளுடன் நாம் நாட்களையும் நேரத்தையும் செலவிட்டால்தான், அன்பு மலரும் அக்கறையும் ஓங்கும், குழந்தையும் ஆரோக்கியத்துடன் வளரும். தனக்கு ஒரு தேவை என்றால், தாய் தந்தையரிடம் உரிமையாக கேட்க முடியும், இருவரும் இல்லை என்றால் அடுத்தவரிடம் கேட்பதற்கு தயங்கும். அங்கே குழந்தையின் உளவியல் பிரச்சனை தோன்றுகிறது. இவ்வாறு ஒவ்வொரு நாளும் தனிமையை நோக்கிய பயணத்தில் முடிவு குழந்தையின் தலையெழுத்தை மாற்றிவிடும்.

Amazon: Laptops Year end deals

இவ்வாறு உளவியல் ரீதியாக குழந்தைகள் பாதிக்கபுட்டுள்ளனரா என்று ஆராய்ந்து சரிசெய்க. உளம் என்றாலே உட்புறம். உள்ளத்தை பற்றிய கல்வி, அவை அகம் நோக்குதல் அல்லது அகப்பண்புகள், உற்று கவனித்தல் ஆகும்.

அகம் நோக்குதல்

அகம் நோக்குதல் என்பது தன் உள்ளதாலும் உடலாலும் ஏற்படும் மன எழுச்சியின் காரணமாக ஏற்படும் மாற்றங்கள். தன்னை தானே நோக்குதல் அல்லது பரிசோதித்தல் அகம் நோக்குதல் ஆகும்.

வாழ்வில் தான் சந்தித்த விஷயங்கள், நிகழ்வுகள் மற்றும் தான் கற்று தேர்ந்த கல்வி அதனால் ஏற்பட்ட அறிவு, கற்பனை எல்லாம் சார்ந்தது தான் அகம் நோக்குதல் அதற்கேற்றவாறு எண்ணமும் செயலும் மாறுபடும். ஒரு குழந்தையின் அக நோக்குதல் பரிசோதனை செய்வது என்பது அவ்வளவு எளிதானது அல்ல.

உற்று கவனித்தால் அல்லது புறப்பண்புகள்

உற்று கவனித்தால் மூலம் சோதனை செய்யும்பொழுது குற்றங்களையும், தவறுகளையும் எளிதாக நீக்க முடியும். உற்று கவனித்தல் பண்புகள் பல்வறு அமைப்பை கொண்டிருக்கும். அவை

ஒருவரின் எழுத்துக்கள்
ஓவியங்கள்
சிந்தனை வெளிப்பாடுகள்
இயல்பான நடத்தைகள்.

உற்று கவனித்தால் முறையில் ஒருவரின் நடத்தையின் மீது முழு கவனத்தையும் செலுத்திவிட கூடாது. ஏனென்றால், சிலர் இன்ப நிகழ்வுகளுக்கும், துன்ப நிகழ்வுகளுக்கும் ஒரே விதமான வெளிப்பாடை கொடுப்பபார்கள்.

எடுத்துக்காட்டாக, கண்ணீர் சிந்துதல், கைகால்கள் பதற்றம், வியர்த்து விடுதல் முதலியன இன்ப துன்ப நிகழ்வுகள் இரண்டிற்குமே வெளிப்படும் பொதுவான பண்புகள் ஆகும்.

குழந்தைகள் பொதுவாக தமது மன எழுச்சியை அடக்கி வைக்க மாட்டார்கள். இதற்கு தீர்வு இயல்பான நிலையில் அவர்களின் நடத்தைகளையும் செயல்களையும் கவனித்தல் மூலம் பிரச்சனை அறிந்து சரி செய்யலாம். எடுத்துக்காட்டாக, யோகா பயிற்சியின் போது குரு மற்றவர்களின் தவறுகளை உற்றுநோக்கி திருத்தமடைய செய்யலாம். அதுபோல குழந்தையின் செயலை கவனித்து சரி செய்ய முடியும்.

இனிமேலாவது குழந்தைகளுக்காக நேரம் செலவிடுங்கள். குழந்தை செல்வமே ஆரோக்கியமான செல்வம்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வயிற்றில் கொழுப்பு சேர்வதால் ஏற்படும் விளைவுகள்
கர்ப்ப காலத்தில் பயணம் செய்யலாமா?