குழந்தை வளர்ப்பும் வீட்டு வைத்தியமும்

குழந்தை வளர்ப்பும் வீட்டு வைத்தியமும்

முதலில் இரண்டு அல்லது அதற்கு மேல் குழந்தைகள் இருந்தால் ஒருவரை மற்றோருவரோடு ஒப்பிட்டு பேச கூடாது. அதனால் அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படும். இதனையே குழந்தை வளர்ப்பு பெற்றோரின் கடமை தலைப்பில் பதிவிட்டிருந்தேன்.

பாரம்பரிய முறை

குழந்தைகளுக்கு தேங்காயை துருவி அல்லது சிறியதாக நறுக்கி நன்றாக மென்று தின்ன கொடுக்கலாம். இது தாய்ப்பாலை விட சக்தி வாய்ந்தது.

குழந்தைகளுக்கு பெரும்பாலும் அக்கி நோய் தொற்று ஏற்படும். அதற்கு ஆலம் விழுதை சாம்பலாக்கி நல்லெண்ணையில் குழைத்து தடவி வந்தால் அக்கி குணமாகும். தரைபசலை கீரையையும் அரைத்து அக்கியின் மீது தடவி வர குணமாகும்.

வயிறு பெரியதாக உள்ள குழந்தைகளுக்கு கோரை கிழங்கு தோல் நீக்கி சூப் வைத்து கொடுக்க சரியாகும்.

சிறிய வெங்காயத்தை வெந்நீரில் கரைத்து தெளிந்த நீரை குடித்தால் குழந்தைகளுக்கு தொடர் இருமல் நிற்கும்.

வயிற்றுப்புண் குணமாக அம்மான் பச்சரிசியை அரை நெல்லிக்காய் அளவு கொடுக்கவும்.

Amazon: Laptops Year end deals

குழந்தைகளுக்கு காய்ச்சல் குணமாக நிலவேம்பு, சுக்கு, திப்பிலி, சீந்தில் பொடி இடித்து கஷாயம் வைத்து சிறிதளவே(2-3 டீஸ்பூன்) குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

6 – 12 மாதம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் சேர்த்து ஆட்டுப்பால், பழச்சாறு, பசும்பால் சேர்த்துக் கொடுக்கலாம்.

முகப்பொலிவு உடல் அழகு பெற
மன அழுத்தம் கையாளும் வழிகள்