குழந்தைப்பேறு தரும் செவ்வாழைப் பழம்

செவ்வாழை பழம் (BANANA)

இந்தியாவில் சுமார் 15 சதவீதம் தம்பதியருக்கு மலட்டுத் தன்மை பிரச்னை உள்ளது. இது ஒவ்வொரு ஆண்டுக்கும் 10 சதவீதம் வரை அதிகரிக்கின்றது. இதனால் பல தம்பதியினர் சொல்ல முடியாத துயரத்தில் தனது தினசரி வாழ்க்கையை நடத்துகின்றனர். இதனை சரி செய்ய பல நவீன முறைகளையும் கையாண்டு வருகிறார்கள். அனால் இதற்கு செவ்வாழைப்பழம் ஒரு மாமருந்து என்று நாட்டு வைத்தியர்கள் கூறுகின்றனர். அது பற்றி தகவலைப் பார்ப்போம்.

மற்றைய பழங்களை விட செவ்வாழையில் இரும்புச் சத்து சுண்ணாம்புச்சத்து மற்றும் உயிர்ச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. இதனை குழந்தைப்பேறு வேண்டும் தம்பதியினர் அனுதினமும் உண்டு வந்தால் உடலில் உயிர் அணுக்கள் போதுமான அளவில் உற்பத்தி ஆகி கருத்தரிக்கும் வாய்ப்பினை உருவாக்கும்.

செவ்வாழை பழம் சாப்பிடுவதனால் மற்ற நன்மைகள்

தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிடுபவர்களுக்கு அஜரணக் கோளாறு ஏற்படாது. மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலே நோய் குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வந்தால் அந்த குறைபாடுகளில் இருந்து விடுபடலாம்.

Amazon: Laptops Year end deals

மேலும் தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு பழம் உண்டு வந்தால் நல்ல ஜீரண சக்தி உண்டாகும். எந்த வயதினராக இருந்தாலும், கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி உணவில் செவ்வாழைப் பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடையும்.

யோகா கலை வரலாறு
தண்ணீர் அருந்தி உடல் நலத்தை பாதுகாப்பது எப்படி?