குலதெய்வம் கோயில் வழிபாடு

குலதெய்வ கோயில் வழிபாடு
குலதெய்வ வழிபாடும் இயற்கை வழிபாடும்

குலதெய்வ வழிபாடு பெரும்பாலும் தமிழகத்தில் மட்டும் தான் இன்றளவும் நடைமுறையில் உள்ளது எனலாம். உலகின் தொன்மையான வழிபாடுகள் இயற்கையை வழிபடுவதாக இருந்தது. அதனாலேயே தமிழர்கள் தைப்பொங்கல் அன்று சூரிய வழிபாட்டினையும் உழவுக்கு உறுதுணையாக உள்ள கால்நடைகளையும் இன்றளவும் வெகு விமர்சனையாக வழிபடுகின்றனர்.

இயற்கை வழிபாட்டு பின்னர் மக்கள் தங்கள் வீட்டில் வாழ்ந்து வந்த மூதாதையர்களையும், சமூகத்தின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக வாழ்ந்த சான்றோர்களையும் வணங்கும் வழக்கத்தினை ஏற்படுத்திக்கொண்டனர்.

குலம்’ என்பது ஒரு குறிப்பிட்ட மூதாதையரின் வழி வந்தவர்கள் வாயிலாக உறவு கொண்டுள்ள ஒரு குழு அமைப்பாகும். இரத்த உறவுடைய அண்ணன் தம்பிகள் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்களாக கருதப்படுவர். கட்டிக்கொடுத்த பெண்களுக்கு அவருடைய கணவனின் குலதெய்வமே வழிபாட்டுக்குரியதாகும். தன் குலத்தின் முன்னோர்களில் சிறந்து விளங்கியவர்களையும், மக்களுக்காக உயிர் தியாகம் செய்தவர்களையும் தெய்வமாக பாவித்து வணங்கி வழிபட தொடங்கினர்.

Amazon: Laptops Year end deals

குறியீட்டு வழிபாடு

ஆரம்ப காலத்தில் குல தெய்வ வழிபாடுகள் தீபம், சூலம், வேல், பீடம், மரம், கல் போன்ற அடையாள குறியீடுகளை வழிபடுவதாக இருந்தது.

பின்னர், கிராம புறங்களில் மக்களை காக்கும் தெய்வங்களை வணங்கும் வழக்கத்திற்கு ஊர்த்தெய்வ வழிபாடு என்றும் வருடம் ஒருமுறை திருவிழா எடுத்து வழிபடுவார்கள். காவல் தெய்வங்களே ஊர்த்தெய்வங்களாக வணங்கப்படுகிறார்கள். பெரும்பாலும் இவர்கள் முன்னர் வாழ்ந்து மறைந்தவர்களே ஏனென்றால் இவர்களின் கதைகள் ஓலைச்சுவடியில் இன்றும் வைத்துள்ளனர்.

அருள்வாக்கு சொல்லுதல் அல்லது குறி சொல்லுதல்

காவல் தெய்வ வழிபாடு செய்பவர்கள் பெரும்பாலும் குறி சொல்லுதல் அல்லது வாக்கு சொல்லுதல் முறையை வழக்க படுத்தியுள்ளனர். வழிபடும் காவல் தெய்வங்கள் அல்லது குல தெய்வங்கள் அருள்வாக்கு சொல்பவர் மீது நின்று மக்களுக்கு பலன்களை சொல்லுவார்கள். இம்மக்கள் என்னதான் ஜாதகம் பார்த்தாலும் குறி சொல்வதையே பெரும்பாலும் நம்புவார்கள். அது அவர்களின் பக்தியை குறிக்கின்றது.

குல தெய்வ வழிபாட்டில் பெரும்பாலும் காவல் தெய்வங்களே வழிபாட்டுக்கு உரியதாக இருக்கும். இதனை வழிபாடும் முறைகளும் சடங்குகளும் மற்ற வழிபாடுகளில் இருந்து மாறுதலாக இருக்கும், அவை பலியிடுதல், தீ மிதித்தல். ஆணி செருப்பணிதல், கோழிக் குத்துதல் மற்றும் நேர்ந்து விடுதல் முக்கியமானவை.

பலன்கள்

குல தெய்வத்தை தொடர்ந்து வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் வேண்டும் வரம் கிடைக்கும்.

சாதி, மதம், இனம் பாராமல் இன்றளவும் கிராமபுற மக்கள் ஒற்றுமையுடன் வாழ வழிவகுக்கிறது.

குழந்தை பாக்கியம் சித்திக்கும், தொழில் அபிவிருத்தி அடையும்.

நீங்கள் எத்தனை பெரிய கோயில்களுக்கு சென்றாலும் குலதெய்வத்தின் அருள் இல்லாமல் அனுக்கிரகம் கிடைக்காது. குலதெய்வம் அவ்வளவு சக்தி வாய்ந்தது.

குலதெய்வம் தெரியாதவர்கள்

இன்றைய நவீன உலகில் பரம்பரை தொட்டு வரும் வழக்கம் மறந்து போனவர்களுக்கு குலதெய்வம் யாரென்று தெரியாதவர்கள் திருச்செந்தில் ஆண்டவரான ‘முருகக் கடவுளை’ குல தெய்வமாக ஏற்றுக் கொண்டு வழிபாடு செய்யலாம்.

குறிப்புகள்

ஒரு வம்சம் என்பது ஒருவருக்கு பிறந்த மகன் அவருக்கு பிறக்கும் மகன் பின் அவனுக்குப் பிறக்கும் மகன் என ஆண் குழந்தை மட்டுமே ஒரு வம்ச கணக்கில் வரும். ஒருவருடைய சராசரி வயது 60 என்றால் அவருடைய பாட்டன், பூட்டன் காலம் என 13 ஜென்மங்களுக்கு முந்தய காலம் எனக் கணக்கிட்டால் கூட 13 x 60 = 780 ஆண்டுகள் வரும். நம்மில் யாருக்காவது 780 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சந்ததியினர் பற்றி தெரியுமா? கண்டிப்பாக சாத்தியமில்லை அதனால்தான் ஒரு குல தெய்வம் ஏழேழு ஜென்மம் அதாவது 49 ஜென்ம காலத்துக்கும் ஒரு வம்சத்தைக் காப்பாற்றும்.

வருடம் ஒருமுறையாவது குலதெய்வம் கோயில் சென்று வழிபடவேண்டும். குலதெய்வத்தினை வழிபாடும்பொழுது தன் சொந்த பந்தங்கள் அனைவரையும் அழைத்துச் சென்று வழிபடுவது சிறந்தது.

கனவு பலன்கள்
குண்டலினி சோதியை பற்றி மகான் சிவவாக்கியர் கூறியது

One comment

  • குலதெய்வ வழிபாடு எவ்வளவு முக்கியம் என்று சிறப்பாக கூறியிருக்கிறீர்கள்.

    மிக்க நல்ல செய்தி !

    நன்றி ! வாழ்க வளமுடன் !