குரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019

குரு பெயர்ச்சி பலன்கள்

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019 – குரு பகவான் இன்று இரவு 10.05 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். மேலும் ஒரு வருட காலம் இங்கு சஞ்ரிசாக்கிறார். இந்த பெயர்ச்சியினால் ஒவ்வொரு ராசி காரர்களுக்கும் வரும் மாறுதல்களை நாம் பார்ப்போம்.

குரு பெயர்ச்சி பலன்கள்

மேஷம்

அஷ்டமத்தில் குரு இருக்கின்றார் என்கிற கவலை வேண்டாம். அவரது பார்வை 12 ஆம் இடம் 2 ஆம் இடம் மற்றும் 4 ஆம் இடங்களின் மீது விழுவதால் தனவரவு உடல் நலம் முன்னேறும் குடும்ப சந்தோஷங்கள் மற்றும் சுப விரையங்கள் ஏற்படும். திருமணம் அல்லது வீடு வாகனம் வாங்கலாம். ஒவ்வொரு வியாழக்கிழமையும் மகான்களின் வழிபாடு முக்கியம்.

ரிஷபம்

உங்கள் ராசிக்கு 6 வது இடத்தில் இருந்த குருபகவான் தற்போது 7வது வீட்டில் அமர்வதால், கல்யாண வயதில் உள்ள ஆண் பெண்களுக்கு திருமணம் நடைபெறும். வீண் செலவாளியாக இருந்த நீங்கள் தற்போது சிக்கனமாக இருக்க கற்றுக்கொள்வீர்கள். பணி உயர்வில் சற்று ஏமாற்றம் ஏற்படலாம் இருப்பினும் விடா முயற்சியுடன் இறை பக்தியுடனும் அதனை வென்று முடிப்பீர்கள்.

மிதுனம்

உங்கள் ராசிக்கு குரு 6வது வீட்டில் சஞ்சரிக்கிறார். 6 ஆம் வீடு பொதுவாக சுப ஸ்தானம் இல்லை. இருப்பினும் அவரது பார்வை 2, 10,12 ஆம் இடம் இட தன ஸ்தானத்தை பார்வையிடுகிறார். பணம் ஒரு பக்கம் வந்தாலும் மறுபக்கம் சுப செலவுகள் ஏற்படும். வேலைச்சுமை, வீண் அலைச்சல் ஏற்படும், வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

கடகம்

இதுவரை உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் அமர்ந்த குருபகவான் தற்போது 5வது வீட்டில் அமர்கிறார். குருபகவான் ராசியையும் 9ஆம் இடம் மற்றும் 11வது இடத்தையும் பார்வையிடுகிறார். குடும்பத்தில் அவ்வப்பொழுது சிறு மன உளைச்சல்கள் தோன்றி மறையும். பணவரவு அதிகரிக்கும். திருமண தடை நீங்கி மங்கள நிகழ்ச்சி நடைபெறும்.

சிம்மம்

உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் இருந்த குருபகவான் தற்போது 4வது வீட்டில் அமர்கிறார். அவருடைய பார்வை ராசிக்கு 8, 10 மற்றும் 12வது இடததில் படுவதால். வீட்டில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்படும். நல்லவர்களின் நட்பை வளர்த்துக்கொள்வது முக்கியம். தாய் வழி உறவுகளுடன் பிரச்சனைகள் ஏற்படும். 12ஆம் இடத்தை பார்ப்பதால் சுப செலவுகள் ஏற்படும். பணிச்சுமை அதிகரிக்கும்.

கன்னி

உங்கள் ராசிக்கு 2வது இடத்தில் அமர்ந்த குருபகவான் இந்த பெயர்ச்சியில் 3வது வீட்டில் அமர இருக்கிறார். இதனால் அடிக்கடி பயணங்கள் ஏற்படும். குரு பகவான் ராசிக்கு 7, 9 மற்றும் 11வது இடத்தை பார்வையிடுகிறார். இதனால் வேலைப்பளு ஏற்பட்டாலும் நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும், கடன் பிரச்சனைகள் தீரும். ஆடை, ஆபரணங்கள், புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். பண வரவு அதிகரிக்கும்.

துலாம்

துலாம் ராசி காரர்களே இதுவரை உங்கள் ராசியிலேயே அமர்ந்த குரு பகவான் தற்போது 2வது வீடான தன ஸ்தானத்திற்கு செல்கிறார். மேலும், 6, 8 மற்றும் 10வது இடத்தை பார்வையிடுகிறார். குரு பெயர்ச்சியினால் வீட்டில் அமைதி நிலவும், குடும்பத்தாருடன் இருந்த மனக்கசப்புகள் தீரும். சிலருக்கு உயர் பதவிகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு இரட்டிப்பு இலாபம்.

விருச்சிகம்

உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் இருந்த குருபகவான் இந்த பெயர்ச்சியினால் ஜென்ம குருவாக அமர்கிறார். உங்கள் ராசிக்கு 5, 7 மற்றும் 9வது வீட்டில் குரு பகவானின் பார்வை விழுகிறது. இதனால் பொறுப்புகள் அதிகரிக்கும். வேலைச்சுமை கூடும். கடமை உணர்வுகளும் அதிகரிக்கும். பணவரவு கிடைக்கும். பயணங்களில் எச்சரிக்கை தேவை. போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். வீடு வாகன வாங்க வாய்ப்புள்ளது.

தனுசு

இதுவரை 11ஆம் வீட்டில் இருந்த குரு பகவான் தற்போது விரய ஸ்தானமான 12ஆம் இடத்தில் அமரவிருக்கிறார். சுப விரயங்கள் ஏற்படும் அது போல பண வரவும் அதிகமாகும். குரு பகவான் 4, 6 மற்றும் 8 ஆம் இடத்தை பார்க்கிறார். வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம். பதவி உயர்வில் கடினம். சாப்பாட்டில் கவனம் தேவை. வர வேண்டிய தொகைகள் வந்து சேரும்.

மகரம்

இதுவரை உங்கள் ராசிக்கு 10ல் அமர்ந்த குரு பகவான் தற்போது 11ல் லாப வீட்டில் சஞ்சரிக்க உள்ளார். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும், வாங்கிய கடனை திருப்பி தந்து முடிப்பீர்கள். மனக்கசப்புடன் இருந்த உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே காதல் அதிகரிக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடி வரும். திட்டங்கள், கனவுகள் அனைத்தும் நிறைவேறும்.

கும்பம்

ராசிக்கு 9ஆம் இடத்தில் இருந்த குரு பகவான் இப்பொழுது 10ஆம் இடத்தில் அமர்கிறார். அடிக்கடி மன உளைச்சல் ஏற்படும். யாரையும் எளிதில் நம்ப வேண்டாம். தேவையான இடவசதி, பொருள் வசதி, கடனுதவி கிடைக்கும். குரு 2,4 மற்றும் 6 ஆம் வீட்டை பார்ப்பதால் கோர்ட் வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். தாய் மற்றும் வாழ்க்கை துணை வழியில் செல்வாக்கு உயரும். திடீர் பயனர்கள் ஏற்படும்.

மீனம்

இதுவரை உங்கள் ராசிக்கு 8ல் இருந்த குரு தற்போது 9ம் இடத்தில் அமர்கிறார். எடுத்த காரியங்களில் வெற்றி, எதிர்பாராத இடத்தில் இருந்து பணவரவு கிடைக்கும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமண யோகம் உண்டு. புத்திர பாக்கியம் உண்டு. பரம்பரை சொத்துகள் சேரும். குடும்பத்தில் நிலவி வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். கோர்ட் வழக்கில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகவே அமையும்.

வாழ்க வையகம் !! வாழ்க வளமுடன் !!

மேலும் பார்க்க : சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020 | ஜோதிடம்

பாரதியாரின் பகவத் கீதை
சுவாமிஜி விவேகானந்தரின் பொன்மொழிகள்