சண்டே ஸ்பெஷல்: காளான் புலவு

காளான் புலவு
காளான் புலவு செய்ய தேவையானவை

பாசுமதி அரிசி – 2 கப்
காளான் – 12
பெரிய வெங்காயம் – 2
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மிளகு தூள் – 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
இஞ்சி பேஸ்ட் – 1 டீஸ்பூன்
பூண்டு பேஸ்ட்- 1 டீஸ்பூன்
தயிர் – 1/2 கப்

Amazon: Laptops Year end deals

தாளிக்க

பட்டை – 2
இலவங்கம் – 2
ஏலக்காய் – 2
எண்ணெய் – 2 டீஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்

செய்முறை

காலனை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பாசுமதி அரிசியை கழுவி 3 கப் தண்ணீர் விட்டு ஊற வையுங்கள். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். குக்கரில் எண்ணெய், நெய் விட்டு காயா விடுங்கள். எண்ணெய் நெய் கலவை காய்ந்ததும் தாளிக்க வாய்த்த பொருட்களை போட்டு தாளியுங்கள். பின் அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேருங்கள்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போக நன்றாக வதக்குங்கள். பின் காளானையும் சேர்த்து வதக்கி தயிரையும் சேருங்கள். அதனுடன் கரம் மசாலா தூளை சேருங்கள். 5 நிமிடம் கொதிக்க விடுங்கள், கொதி வந்ததும் ஊறவைத்த அரிசியை தண்ணீருடன் சேர்த்து தேவையான உப்பு போட்டு, நன்கு கிளறி மூடிவைத்து 1 அல்லது 2 விசில் விடுங்கள். விசில் வந்த பிறகு தீயை குறைத்து, 5 நிமிடம் கழித்து இறக்குங்கள். காளான் புலவு தயார்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெந்தயம் மிளகு பொடி
புதிய டிஷ் முள்ளங்கி பூரி