காலிஃப்ளவர் கேரட் கூட்டு

Cauliflower carrot
தேவையானவை

காலிஃப்ளவர் – 1 உதிர்த்தது
கேரட் – 50 gm பொடியாக நறுக்கியது
கடலை பருப்பு – 25gm
துவரம் பருப்பு – 25gm
பாசி பருப்பு – 25gm
or
3 பருப்பும் சேர்த்து – 1 டம்ளர்
தனியா – 1.5 டீஸ்பூன்
தேங்காய் துருவியது – சிறிதளவு
சீரகம் – 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய் – தாளிக்க 2 டீஸ்பூன்
கடுகு – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை

துவரம் பருப்பு, கடலை பருப்பு, பாசி பருப்பு மூன்றையும் ஒன்றாக வேக வைக்க வேண்டும். பின்னர் காலிஃப்ளவர், கேரட் இரண்டையும் ஒன்றாக வேக வைக்கவும். தனியா, சீரகம் இரண்டையும் வறுத்து பின்னர் அதனுடன் பச்சை மிளகாய், தேங்காய் துருவலை சேர்த்து அரைக்கவும். இப்பொழுது வெந்த பருப்பு கலவையையும், காய்கறி கலவையையும், அரைத்து வைத்த தேங்காய் விழுதையும் ஒன்றாக சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். கொதி வந்ததும் எண்ணெய், கடுகு, கறிவேப்பிலையை தாளித்து அதனுடன் சேர்த்து இறக்கி வைக்க வேண்டும். சுவையான காலிஃப்ளவர் கேரட் கூட்டு ரெடி.

Amazon: Laptops Year end deals

சண்டே ஸ்பெஷல் பனீர் புலாவு
டேஸ்டான வாழைப்பழ சப்பாத்தி