உடலில் ஏற்பட்டுள்ள காயம் குணமாக

Injury Recover

காயம் குணமாக இலவம் பிசினை கொஞ்சம் எடுத்து அதனை பொடி செய்து  தடவ சிராய்ப்பினால் ஏற்பட்டுள்ள காயங்கள் குணமாகும்.

புண்கள் மற்றும் புரைகள் ஆற உதிரமா இலையை நன்கு அரைத்து இரவில் பற்றுபோட்டு காலையில் எடுக்க 3 நாளில் குணமாகும்.

Amazon Year end offer Mobiles

காயங்கள் குணமாக அரிவாள்மனை இலை, பூண்டு இலை, குப்பைமேனி இலை, பூண்டு மிளகு அனைத்தும் ஒன்றாக சேர்த்து அரைத்து கட்டலாம்.

வெட்டுக்காயம் குணமாக

வெட்டுக்காயங்கள் குணமாக இலந்தை மரத்தின் இலையை மைய அரைத்து காயத்தின் மீது தடவ குணமாகும்.

புங்கன் இலையை அரைத்து வெட்டு பட்ட இடத்தின் மீது வைத்து கட்ட நாளடைவில் குணமாகும்.

அடிபட்ட காயங்கள் சீல் பிடிக்காமல் ஆற மிளகாய் வத்தல் நன்றாக அரைத்து காயம் மீது கட்டவும்.

குப்பைமேனி இலை அரைத்து வெட்டுபட்ட காயங்கள் மீது தடவினால் சீல்(sceptic) பிடிக்காது.

வெட்டுக்காயங்கள் ஆற வசம்புத்தூளை காயத்தின் மீது தூவலாம்.

Amazon Year end offer Laptops

புண்கள் ஆற

பெருங்காயத்துடன் வேப்பிலையை மைய அரைத்து காயத்தின் மீது தடவி வந்தால் குணமாகும்.

புளியமரத்தின் பட்டை பொடி செய்து பாலுடன் கலந்து தடவிவந்தால் புண்கள் ஆறும்.

அத்திப்பாலினை தடவினால் காயங்கள் புண்கள் ஆறும்.

சிறிது கடுக்காய்பொடி எடுத்து தேங்காய் எண்ணெயுடன் குழப்பி புண்கள் மீது தடவினால் புண்கள் குணமாகும்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

உடல் ஆரோக்கிய உணவுகள்
அருகம்புல் மருத்துவ குணங்கள்