காதுவலி குணமாக வீட்டு வைத்தியம்

காதுவலி குணமாக

காதுவலி குணமாக மணத்தக்காளி கீரையும், துளசி இலையும் சம அளவு எடுத்து சேர்த்து சாறு பிழிந்து மூன்று துளிகள் காதில் விட்டால் காதுவலி குணமடையும்.

தூதுவளை சாறு இறந்து சொட்டு காதில் விட்டால் காது அடைப்பு மற்றும் காதில் உள்ள கட்டி குணமாகும்.

Amazon Year end deals Laptops

காதுவலிக்கு எலுமிச்சம்சாறு 4 துளிகள் காதில் விடலாம்.

தைவேளை இலைச்சாறு 1 துளி காதில் விட்டால் காதுவலி குணமடையும்.

திருநீற்று பச்சிலையை வாட்டி பிழிந்து சாறு எடுத்து இறந்து துளிகள் காதில் விடவும். காது மந்தம் நீங்கும்.

சிறுதேள்கொடுக்கு இலைச்சாறு மற்றும் நல்லெண்ணெய் சம அளவு கலந்து காய்ச்சி காதில் இறந்து சொட்டுகள் விட காதடைப்பு தீரும்.

Amazon Year end deals Mobiles & Tablets

பெருங்காயத்தை பொரித்து தேங்காய் எணெயில் சிறிது நேரம் ஊறவைத்து அதில் இரு துளிகள் காதில் விட காது குத்தல் நிற்கும்.

செவிடு குணமாக

கொன்றைவேர் பட்டை முருங்கைவேர் வேர்ப்பட்டையும் அரைத்து துணியில் பிழிந்து சாறு எடுத்து இரண்டு சொட்டுகள் விட செவிடு குணமாகும்.

காதில் கிருமிகள் ஒழிய

ஆமணக்கு பூ சாறு வசம்பு மணத்தக்காளி இலைச்சாறு, வெள்ளைப்பூண்டு ஏதாவது ஒரு சாற்றை ஓரிரு துளிகள் காதில் விட கிருமிகள் அழியும்.

பூச்சிகள் புகுந்தால்

குப்பைமேனி சாறும் பிழிந்து சில சொட்டுகள் விட்டால் பூச்சிகள் வெளியேறிவிடும்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

உலர்ந்த திராட்சை பயன்கள்
பெண்கள் சுகப்பிரசவம் அடைய எளிய மருத்துவம்