கறிவேப்பிலை நெல்லிப்பொடி செய்முறை

கறிவேப்பிலை நெல்லிப்பொடி
தேவையானவை

பெரிய நெல்லிக்காய் – 15
கறிவேப்பிலை – 2 கப் (உருவியது)
காய்ந்த மிளகாய் – 15
கூட்டு பெருங்காயம் – சிறிய கட்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை

நெல்லிக்காய்களை கொட்டைகள் நீக்கி வெயிலில் நன்றாக காய வைத்துக்கொள்ளவும். காய்ந்த பின் மிக்ஸியில் போட்டு அரைத்து வையுங்கள். பிறகு, சிறிது எண்ணெயை வாணலியில் விட்டு பெருங்காயத்தை பொரியவிட்டு எடுத்துக்கொள்ளவும். எடுத்தபின் அதே எண்ணெயில் மிளகாய் போட்டு வதக்கவும். வதக்கியபின் அடுப்பை அணைக்கவும், அதே சூட்டில் கறிவேப்பிலையை போட்டு கிண்டி எடுங்கள்.

Purchase Laptops at Modest Price in Amazon

மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள நெல்லிக்காயுடன் மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து அரைக்கவும். கடைசியாக கறிவேப்பிலையையும் அதில் போட்டு அரைத்து வைத்துக்கொள்ளவும். வாசனையுடன் இருக்கும் இந்த பொடியை சூடான சாதத்தில் கலந்து சுவைக்க அருமையாக இருக்கும். ஆரோக்கியமாகவும் இருக்கும்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்
பனீர் தோசை செய்முறை