கர்ப்ப காலத்தில் தோலில் ஏற்படும் மாற்றங்கள்

Changes in the skin during pregnancy

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு முகம், நெற்றி, மூக்கு, கன்னங்கள், உதடுகள் ஆகியவற்றில் உள்ள தோலின் நிறம் கருமையாக மாறி இருக்கும். இது 70 % கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் மாற்றமாகும். பொதுவாக 3 மாதங்கள் முடிந்த பிறகு அல்லது இறுதி 3 மாதங்களில் ஏற்படலாம். மேலும் வெயிலில் அதிகம் அலையும் படி இருந்தால் அதிகமாகும். இந்த பிரச்சனை குழந்தை பிறந்து சிறிது நாட்களில் இப்பிரச்சனை சரியாகி தோல் பழைய நிலைக்கு மாறிவிடும். அப்படி இல்லையென்றால் தகுந்த மருத்துவரை (Gynaecologist) அணுகி ஆலோசனை பெறவும்.

கர்ப்ப அரிப்பு (puperal urticaria)

பொதுவாக கடைசி 3 மாதங்களில் தோலில் தடிப்புகளாக வரும். சிலருக்கு அதிகமாகவும் சிலருக்கு குறைவாகவும் இருக்கலாம். இந்த தடிப்புகள் பிரசவம் முடிந்து சிறிது காலத்தில் தானாகவே மறைந்து விடும். இதனால் குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

கர்ப்ப காலத்தில் முகப்பருக்கள் அதிகமாக ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இது கர்ப்ப காலம் முடிந்து மேலும் அதிகமாக வாய்ப்புள்ளது. இதுக்கு மருந்துகள் கர்ப்ப காலத்தில் கொடுக்க படுவதில்லை. இதற்கு மருந்து மாத்திரைகள் மருத்துவரின்(Gynaecologist) ஆலோசனை க்கு பிறகே எடுத்து கொள்ள வேண்டும்.

வெரிகோஸ் வெய்ன்ஸ்

கர்ப்பிணி பெண்களுக்கு சாதாரணமாக ஏற்படக்கூடிய வியாதி. அதிகப் படியான எடை வயிற்றில் கூடுவதனால், கால்களில் நரம்புகள் புடைத்துக் கொண்ட மாதிரி இருக்கும். சிலருக்கு மார்பு மற்றும் முகத்தில் தோன்றும். இவை அனைத்தும் பிரசவத்திற்கு பிறகு மறைந்துவிடும்.

சில பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றாலும். நாம் முதலில் நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். இதையே ‘வருமுன் காப்போம்’ என்போம், இதற்கேற்ப சில வழிகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

அவை, ஆழ்ந்த உறக்கம், வெயிலில் அலைவது குறைத்துக் கொள்ள வேண்டும். முகத்தை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முகத்தினை வாசனை திரவியம் கொண்டு தூய்மை செய்தல், அதிக தண்ணீர் அருந்துதல், மனம் எப்போதும் சந்தோசமாக இருத்தல் ஆகியன.

குழந்தை வளர்ப்பு பெற்றோரின் கடமை
பிள்ளையின் நடத்தை கோளாறு, அதற்கான சிகிச்சை

One comment