எழுத்துக்களின் மாத்திரை

தமிழ் இலக்கணம்
எழுத்துக்களின் மாத்திரை

1. குற்றெழுத்துக்கு மாத்திரை ஒன்று, நெட்டெழுத்துக்கு மாத்திரை இரண்டு.

மெய்யெழுத்துக்கும் ஆய்தவெழுத்துக்குந் தனித்தனி 1/2 மாத்திரை.

உயிர்மெய்க் குற்றெழுத்துக்கு ஏறிய உயிரின அளவாகிய மாத்திரை ஒன்று; உயிர்மெய் நெட்டெழுத்துக்கு ஏறிய உயிரின அளவாகிய மாத்திரை இரண்டு.

Amazon year end deals on Electronics

மாத்திரையாவது கண்ணிமைப்பொழுது, அல்லது கைந்நொடிப்பொழுது.

2. உயிரெழுத்துக்குள்ளே, உகரமும் இகரமும், சிலவிடங்களிலே தம் மாத்திரையிற் குறைவாக ஒலித்து நிற்கும். ஆவ்வுகரத்திற்கு குற்றியலுகரமென்றும் பெயராம்.

3. குற்றியலுகரமாவது, தனிக் குற்றெழுத்தல்லாத மற்றையெழுத்துக்களுக்குப் பின்னே மொழிகளிளிறுதியில் வல்லின மெய்களில் ஏறி நிற்கும் உகரமாகும்.

ஆக்குற்றியலுகரம், ஈற்றெழுத்தாகிய தன்னைத்தொடர்கின்ற அயலெழுத்தின் வகையiனாலே, நெடிற் றொடர்க்குற்றியலுகரம், ஆய்தத்தொடர்க்குற்றியலுகரம், உயிர்த்தொடர்க்குற்றியலுகரம், வன்றொடர்க்குற்றியலுகரம், மென்றொடர்க்குற்றியலுகரம், இடைத்தொடர்க்குற்றியலுகரம், என ஆறுவகைப்படும். அவைகளுள், நெடிற்றொடர் மாத்திரம் இரண்டெழுத்து மொழியாகியும், மற்றையைந்து தொடரும் மூன்றெழுத்து முதலிய பல வெழுத்து மொழியாகியும் வரும்.

உதாரணம்

நாகு, ஆடு நெடிற்றொடர்க்குற்றியலுகரம்
எஃகு, கஃசு ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
வரகு, பலாசு உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
கொக்கு, கச்சு வன்றொடர்க் குற்றியலுகரம்
சங்கு, வண்டு மென்றொடர்க் குற்றியலுகரம்
அல்கு, எய்து இடைத்தொடர்க்குற்றியலுகரம்

4. தனிக்குற்றறெழுத்துக்குப்பின் வல்லின மெய்களில் ஏறி நிற்கும் உகரமும், மெல்லின மெய்களில் ஏறி நிற்கும் உகரமும் முற்றியலுகரமாம்.
உதாரணம். நகு, கொசு, கடு, அது, கணு, திரு, வழு: பூணு, வாரு, உருமு, கதவு, நெல்லு, கொள்ளு.

5. குற்றியலிகரமாவது, யகரம் வந்து புணருமிடத்துக் குற்றியலுகரந் திரிந்த இகரமாம்.
உதாரணம்.

நாகு + யாது = நாகியது
எஃகு + யாது = எ.கியாது
வரகு + யாது = வரகியாது
கொக்கு + யாது = கொக்கியாது
சங்கு + யாது = சங்கியாது
அல்கு + யாது = அல்கியாது
அன்றியும், மியாவென்னும் அசைச்சொல்லிலே மகரத்தின் மேல் ஏறி நிற்கும் இகரமுங் குற்றியலுகரந் திரிந்த இகரமாம்.

6. பாட்டில் ஓசை குறைந்தவிடத்து, உயிரெழுத்துக்களுள்ளும், ஒற்றையெழுத்துக்குள்ளும், சிலசில, தம் மாத்திரைகளின் அதிகமாக ஒலிக்கும், அவிவுயிரெழுத்துக்கு உயிரளபெடை என்றும் பெயராம்.

7. உயிரளபெடையாவன, மொழிக்கு முதலிலாயினும் இடையிலாயினுங் கடையிலாயினுந் தம் மாத்திரையின் அதிகமாக ஒலித்து வருகின்ற நெட்டெழுத்துக்களேழுமாம். ஆளபெடுகின்ற நெட்டெழுத்துக்குப் பின் அதற்கினமாகிய குற்றெழுத்து அறிகுறியாக எழுதப்படும்.

உதாரணம்

ஆஅடை, ஈஇடு, ஊஉமை, ஏஎடு,
ஐஇயம், ஓஒடு, ஒளஉவை, பலாஅ.
சில விடயங்களிலே குற்றெழுத்து நெட்டெழுத்தாகிப் பின்னளபெடுக்கும்.உதாரணம்.
எழுதல் – எழூஉதல்,
வரும் – வரூஉம்,
குரி – குரிஉஇ

8. ஒற்றளபெடையாவன, மொழிக்கு இடையிலாயினுங் கடையிலாயினுந் தம் மாத்திரையின் அதிகமாக ஒலித்து வருகின்ற ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள் என்னும் பத்து மெய்களும் ஆய்தமுமாம். ஆளபெடுகின்ற ஒற்றெழுத்துக்குப் பின் அவ் வொற்றொழுத்தே அறிகுறியாக எழுதப்படும். இவ்வொற்றளபெடை, குறிற்கீழுங் குறலிணைக்கீழும் வரும்.

உதாரணம்

சங்ங்கு, பிஞ்ஞ்சு, கண்ண்டம், பந்ந்து, அம்ம்பு, அன்ன்பு, தெவ்வ்வர், மெய்ய்யர், செல்ல்க, கொள்ள்க, எஃஃகு, அரங்ங்கு, அங்ங்கனிந்த, மடங்கலந்த.

9. குற்றியலுகரத்துக்குங், குற்றியலிகரத்துக்குந் தனித்தனி மாத்திரை அரை, உயிரௌபெடைக்கு மாத்திரை மூன்று, ஒற்றளபெடைக்கு மாத்திரை ஒன்று.

10. பண்டமாற்றலிலும், அழைத்தலிலும், புலம்பலிலும், இராகத்திலும், உயிரெழுத்தும், மெய்யெழுத்தும், தமக்குச் சொல்லிய அளவை கடந்து நீண்டொலிக்கும்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

தமிழ் இலக்கணம் முதனிலை இறுதி நிலை
திருக்குறள் துறவறவியல்