உழவிலும் உணவிலும் பன்மயம் அழிந்தது – நம்மாழ்வார்

உழவிலும் உணவிலும் பன்மயம் அழிந்தது.

பன்மயம் – நம்மாழ்வார்

இந்திய உழவாண்மை 6000 ஆண்டு காலமாக பல சோதனைகள் செய்து தனது அறிவை சமுதாயத்திற்காக சேகரித்து வைத்திருந்தது. அதை தலைமுறைக்கும் பகிர்ந்து வந்தது.

இதனால் நிலங்களும் வளம்பெற்று வந்தன, கால்நடைகளும் வளம் பெற்று வந்தன.

பன்மய அழிவு

கடந்த 40 ஆண்டுகளில் 6000 ஆண்டுகால வளர்ச்சி பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது. இன்று உலகம் முழுதும் உயிரினப்பன்மை பற்றி ஆராய்ச்சி செய்கிறார்கள். தொடர்ந்து உயிரினப்பன்மை அளிக்கப்படுகிறது.

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பல ஆயிரம் வகை உணவு வகைகளை மக்கள் உண்டார்களாம். அனால் தற்போது 20 – 30 உணவு வகைகளையே மாற்றி மாற்றி சமைத்து உண்கிறார்கள்.

ஏழை நாடுகளில் மக்கள் தன் வருமானத்தில் 80% பணத்தை அரிசிக்காக மட்டும் பயன்படுத்துகிறார்கள்.

அடுத்தபடியாக, எண்ணெய், மிளகாய், புலி ஆகியவற்றுக்காக செலவிடுகிறார்கள். இதனால் மக்கள் தொடர்ந்து தம் நலனை இழந்து வருகின்றார்கள். உணவில் பன்முகத்தன்மை இல்லை. ஆகவே பலவித நோய்களுக்கு இறையாகிறார்கள்.

இனி விழிப்புணர்வுடன் வாழ்வோம் இயற்கை விவசாயத்தை பின்பற்றுவோம்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

உணவு சங்கிலியில் கால்நடை நீக்கப்பட்டது - நம்மாழ்வார்
நவீன உழவாண்மை சீரழிவு - நம்மாழ்வார்