உளுத்தம்பருப்பு மாவு உருண்டை

உளுத்தம்பருப்பு மாவு உருண்டை

உளுத்தம்பருப்பு மாவு உருண்டை

தேவையானவை

முழு உளுத்தம்பருப்பு – 1/2 kg
சர்க்கரை – 1/2 kg
நெய் – தேவையான அளவு
ஏலக்காய் பொடி – சிறிதளவு

உளுத்தம்பருப்பு மாவு உருண்டை செய்முறை

உளுத்தம்பருப்பு மாவு உருண்டை செய்ய முதலில் உளுத்தம்பருப்பை நன்கு வாசனை வரும்வரை சிவக்க வறுத்துக்கொள்ளுங்கள். பிறகு மெஷினில் கொடுத்து, உளுத்தம்பருப்பையும் சர்க்கரையையும் தனித்தனியாக அரைத்துக்கொள்ளுங்கள்.

உளுத்தம்பருப்பை ரொம்ப நைஸாக அரைக்காமல் நன்றாக ரவை பதத்தில் அரைக்கவேண்டும். அதனுடன் நெய்யை சுடவைத்து ஊற்றி சிறிதளவு ஏலக்காய் பொடி சேர்த்து உருண்டையாக பிடித்து உண்ணலாம்.

நன்றி!! வாழ்க வையகம் !! வாழ்க வளமுடன்!!

வெங்காய பஜ்ஜி தயார்
ஆரோக்கியமான எள் உருண்டை