உலர்ந்த திராட்சை பயன்கள்

Dry Grapes

உலர்ந்த திராட்சை பயன்கள்: உலர்ந்த திராட்சையை வெந்நீரில் போட்டு சில நிமிடங்கள் ஊற வைத்து, பின் அதனை குடித்தால் மயக்கம் குணமாகும்.

மஞ்சள் காமாலை உலர்ந்த திராட்சை சாப்பிட நோயுள்ளவர்கள் சாப்பிட குணமாகும்.

உலர்ந்த திராட்சையில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது.

Amazon Year end offer Laptops

உடல் எடை கூட்ட

உலர்ந்த திராட்சையில் சாதாரண திரட்சையை விட எட்டு மடங்கு அதிக சர்க்கரை உள்ளது. தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

மலச்சிக்கலுக்கு

உலர்ந்த திராட்சை 60 கிராம்
ஏலக்காய் 30 கிராம்
சீரகம் 2 கிராம்
வால் மிளகு 1/2 கிராம்
ரோஜா இதழ் – 2 கிராம்
கீழாநெல்லி வேர் – 5 கிராம்

மேற்கூறிய அனைத்தையும் ஒன்றாக இடித்து தண்ணீரில் காய்ச்சி வடிகட்டி, 100 மில்லி அளவு எடுத்துக்கொண்டு பின் அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்துவர மலச்சிக்கல் பிரச்சினை தீரும்.

Amazon Year end offer Mobiles

கவனிக்க வேண்டியவை

சளி பிடித்திருக்கும்பொழுது, காச நோய் உள்ளவர்கள், வாத நோய் உள்ளவர்கள் திராட்சை மற்றும் உலர்ந்த திராட்சை கொண்டு செய்யப்படும் மருந்துகளை தவிர்க்க வேண்டும்.

உலர்ந்த திராட்சையை பதப்படுத்தும் பொழுது இரசாயனங்களை பயன்படுத்துகின்றனர், ஆகவே அதனை நன்றாக நீரினால் சுத்தம் செய்த பின் பயன்படுத்தவேண்டும்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சர்க்கரை நோய் பற்றிய தகவல்
காதுவலி குணமாக வீட்டு வைத்தியம்