உலகின் உயர்ந்த மருந்து

NATURAL THERAPY
உயர்ந்த மருந்து

ஞாயிற்றின்      தோற்றம்
கடலின்              அலை
வானத்தின்       வண்ணம்
திங்களின்         ஒளி
மலையின்        உச்சி
அருவியின்       வீழ்ச்சி
செடியின்          பசுமை
மலரின்             வனப்பு

முதலியவைகளை பார்; அவற்றை உற்று நோக்கு; அதன் இயற்கை அழகுகளையெல்லாம் அள்ளிப் பருகு. அதனால் உனக்கு மகிழ்ச்சி தோன்றும். அதைவிட உன் கொடிய உள்ளத்தைத் திருத்தி, பண்படுத்தும் மருந்து இவ்வுலகில் எதுவும் இல்லை.

Amazon: Laptops Year end deals

எச்சரிக்கை

சீசாவைத் திறந்ததும் முகர்ந்து பாராதே! அதில் நஞ்சு மருந்து இல்லை; நஞ்சு மருந்து இருந்த சீசாவும் அதுவல்ல. அனால், அதில் நெடுநாளாக அடைபட்டு இருக்கிற காற்று நஞ்சாக இருக்கிறது. மக்களின் உடல் நலத்தை கெடுப்பதற்கு இந்த நஞ்சுக்கு காற்றே போதுமானது. ஆகவே எச்சரிக்கையாக இரு. உன் வீட்டில் இருக்கும் மற்றவருக்கும் இதை சொல்லிவை.

வாழ்க தமிழகம்!

திரு கி ஆ பெ விசுவநாதம் பிள்ளை

நகைச்சுவை - கல்யாணசுந்தரம்

One comment

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன