சுவையான உருளைக்கிழங்கு அல்வா

உருளைக்கிழங்கு அல்வா
தேவையானவை

உருளைக்கிழங்கு – 3 பெரியது
சர்க்கரை – 3/4 டம்ளர்
நெய் – தேவையான அளவு
குங்குமப்பூ – 1டீஸ்பூன்
ஏலக்காய் – 3
முந்திரி – 4 சுவைக்கேற்ப
பாதாம் – 4 சுவைக்கேற்ப

செய்முறை

முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து கொள்ளவும். பின் அதன் தோல்களை உரித்து மசித்துக் கொள்ளவும். சர்க்கரையை சிறிது நீர் விட்டு பாகு காய்ச்ச வேண்டும். பிசைந்து வைத்துள்ள கிழங்கை இந்த பாகுவுடன் சேர்த்து நன்றாக கிளறவும். பின்னர் நெய்யில் வதக்கிய ஏலக்காய், முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இதனுடன் சேர்த்து கிளறவும். கிளறிக் கொண்டிருக்கும்பொழுது கெட்டிப்பதம் வர வர சிறிது சிறிதாக நெய் சேர்த்து கொண்டே கிளறவும். கடைசியாக குங்குமப்பூவை சேர்த்து சுவைக்கவும். சுவையான உருளைக்கிழங்கு அல்வா அல்வா ரெடி. இது பாதாம் அல்வாவின் சுவையை தரும்.

Amazon: Laptops Year end deals

அப்பளம் வத்த குழம்பு
வீட்டில் பொரி உருண்டை செய்யலாம்