உடல் எடை குறைத்து அழகு பெற வழிகள்

way to reduce weight and get beauty

ஒருவர் குறைவாக சாப்பிட்டாலும் அதிகமாக சாப்பிட்டாலும் அவருடைய உடல் உட்கிரகிக்கும் தன்மையை பொறுத்தே அமையும். நம் உடல்களிலுள்ள நாளமில்லா சுரப்பிகளான பிட்யூட்ரி (Pituitary), தைராய்டு (Thyroid), அட்ரினல் (Adrenaline) மற்றும் கணையம் (Pancreas) போன்றவற்றில் சுரக்கப்படும் ஹார்மோன்களால் கட்டுப்படுத்தபடுகிறது.

ஹார்மோன்கள் சரிவிகிதம் மாறுபட்டால் உடல் எடையில் மாற்றம் ஏற்படும். அதாவது சிலருக்கு உடல் எடை அதிகமாகும் சிலருக்கு உடல் எடை குறையும்.

Amazon: Laptops Year end deals

நடுத்தர வயதினரிடையே பெண்களாக இருந்தால் குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் தைராய்டு பிரச்சனை ஒரு காரணமாக இருக்கலாம். வேறு சில காரணிகள் உடற்பயிற்சி இல்லாமை, அதிக ஓய்வு, நொறுக்கு தீனி ஆகும்.

இதே, ஆண்களுக்கு அதிகமாக சாப்பிடுவதாலும், மது அருந்துவதும் முக்கிய காரணிகள் ஆகும். மனதில் மகிழ்ச்சி அதிகமானால் கூட உடல் எடை அதிகரிக்கலாம். முதியவர்களுக்கு நோய்களின் தன்மையால் உடல் எடையை கூட்டி விடும். உடற்பயிற்சி செய்ய இயலாததால் ஊளைச்சதை போட்டு விடும்.

அதிக எடையுள்ளவர்கள் மூட்டு வலி, தசை வலி, முதுகு வலி, கை கால் நமச்சல் என அடிக்கடி சிரமப் படுவர். இதிலிருந்த விடுபட வழிகளை காண்போம்.

 1. சாப்பாட்டை குறைத்து உடற்பயிற்சியில் ஈடுபடுவது சிறந்ததது.
 2. உணவினை பட்டியலிட்டு சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும்.
 3. எண்ணெய் பதார்த்தங்களை தவிர்க்கவும்.
 4. மாமிச உணவு அறவே கூடாது.
 5. மதிய உணவில் காய்கறிகள் அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
 6. இரவில் போது பாதி உணவு அல்லது பாதி அளவு சிற்றுண்டி (tiffin) எடுத்துக் கொள்வது நல்லது.
 7. அடிக்கடி உணவில் பால், தயிர், பச்சை வெங்காயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
 8. நொறுக்கு தீனி தவிர்த்து வேறு ஏதாவது சாறு பருக வேண்டும்.
 9. மாவுச்சத்து உணவினை குறைப்பதால் உடல் எடை குறைய அதிக வாய்ப்புண்டு.
 10. வயதுக்கேற்ப உடற்பயிற்சி தேர்ந்தெடுத்து செய்ய வேண்டும். குறைந்தது தினமும் 15 அல்லது 20 நிமிடங்கள் பயிற்சி தேவை யோகா(Yoga), த்யானம் (Meditation), பிராணாயாமம் (Pranayamam), நடத்தல், ஓடுதல் மற்றும் ஆசனப் பயிற்சி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பயிற்சி செய்யலாம்.
 11. வீட்டில் ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டு இருத்தல் நல்லது.
மல்லிகை பூ மருத்துவ குணம்
மலச்சிக்கல் பிரச்சனைகள் சரியாக

2 comments