உடலில் ஏற்படும் புண்கள் குணமாக

உடலில் ஏற்படும் புண்கள் குணமாக
புண்கள் குணமாக

புண்கள் குணமாக, வெற்றிலையை நெய்தடவி வதக்கி பின் பற்று போட தீப்புண்கள் குணமாகும்.

அருகம்புல், மஞ்சள் சேர்த்து அரைத்து புண்கள் உள்ள இடங்களில் 1மணிநேரம் பூசி வந்தால் குணமாகும்.

வெங்காயசாறு, மஞ்சள்தூள் கலந்துபூசினால். தீக்காயங்கள் குணமாகும்.

Amazon: Laptops Year end deals

வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண்கள்

தேங்காய் பாலுடன் சிறிது தேன் சேர்த்து குடித்தால் வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண்கள் குணமடையும்.

மணத்தக்காளி கீரை அடிக்கடி உணவில் எடுத்துக்கொண்டால் வாய்ப்புண்கள் மற்றும் வயிற்றுப்புண்கள் குணமடையும்.

அகத்திக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள் குணமாகும். வயிற்றில் ஏற்பட்டுள்ள அனைத்து குற்றங்களும் சரியாகும. வாரம் இருமுறை எடுத்துக்கொண்டால் வயிற்றிலுள்ள புண்கள் அழிந்து சுத்தமாகும்.

பாகற்காயை வாரம் இரண்டு முறை உணவில் சேர்த்துக்கொள்ள வயிற்றில் உள்ள பூச்சிகள் அழியும்.

சேற்றுப்புண்

வேப்ப எண்ணெயை காய்ச்சி, சோற்றுப்புண் உள்ள இடங்களில் தடவி வந்தால் புண்கள் நாளடைவில் குணமடையும்.

விளக்கெண்ணெய்யை மஞ்சள் தூளுடன் சேர்த்து, சேற்றுபுண்களில் தடவி வந்தால் நாளடைவில் குணமடையும்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

பித்தம் நிவாரணம் அடைய வீட்டு வைத்தியம்
திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்