உடனடி ரவா தோசை செய்வது எப்படி?

RAVA DOSAI
தேவையானவை :

ரவை               100gms
அரிசி மாவு   100gms
மைதா           100gms
மிளகு             1டீஸ்பூன் (லேசாக தட்டிக் கொள்ளவும்)
சீரகம்             1/2 டீஸ்பூன்
உப்பு               தேவையான அளவு
பச்சை மிளகாய்   –     பொடியாக நறுக்கியது
முந்திரி பருப்பு      –     4 (லேசாக தட்டிக் கொள்ளவும்)
கருவேப்பிலை      –      6 nos (நறுக்கியது)

செய்முறை :

முதலில் கிண்ணத்தில் ரவை அரிசிமாவு மற்றும் மைதா மூன்றும் சம அளவில் எடுத்துக்கொண்டு சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும். நன்றாக கலக்கிய பின் அதில் தட்டிய மிளகு சீரகம் முந்திரிப்பருப்பு பச்சை மிளகாய் கருவேப்பிலை மற்றும் உப்பு சேர்க்க வேண்டும். தற்போது சாதாரண தோசை சுடுவது போல் மாவின் தன்மை இருக்கும். இதில் மீண்டும் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி நல்ல திரவ நிலைக்கு கொண்டு வரவேண்டும் அதாவது மாவினை தோசை கல்லை சுற்றி ஊற்றினால் அது நாடு பகுதிக்கு தானாகவே வர வேணடும். இந்த மாவினை ஒரு அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு பயன்படுத்தினால் வீட்டில் இருந்தபடியே சுவையான ரவா தோசையை உண்டு மகிழலாம்.

நன்றி : திருமதி மங்கள கௌரி

Amazon: Laptops Year end deals

ஈசியாக செய்யலாம் கறிவேப்பிலை கஞ்சி
எளிய முறையில் உடனடி சட்னி தயார்