எளிய முறையில் உடனடி சட்னி தயார்

மல்லி சட்னி (CHATNI)

வேகமாக இயங்கும் உலகத்தில் நம் வீட்டில் விருந்தினர் ஏதும் திடீரென்று வந்து விட்டால் பயம் வேண்டாம். அவர்களுக்கு சுவையான உணவை உடனடியாக செய்து கொடுப்பது பற்றிய தகவலில் இன்று உடனடி சட்னி செய்து கொள்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

கடுகு –                           தேவையான அளவு (தாளிக்க)
கருவேப்பிலை –         4
நல்லெண்ணெய் –     3 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 1 கப்
மல்லி தழை –              1/2 கட்டு
பச்சை மிளகாய் –      3
பூண்டு –                       4 பல்
தக்காளி –                    1 (medium size)
புளி –                            அரை நெல்லிக்காய் அளவு
உப்பு –                          தேவையான அளவு

செய்முறை
தாளிக்க வேண்டும்

நல்லெண்ணெய் விட்டு அதனுடன் கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

உரித்த பூண்டு வெங்காயம் மல்லித்தழை ஆய்ந்தது மற்றும் மேற்கூறிய(தாளித்து வைத்த) எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றும் பாதியாக (கவனம்: திப்பி திப்பியாக) அரைத்து கொள்ள வேண்டும். இறுதியாக கடுகு உளுந்தம்பருப்பு சேர்த்து தாளித்து இறக்கி வைத்து கொள்ளலாம். மிகவும் எளிமையான முறையில் சட்னி தயார்.

Amazon: Laptops Year end deals

உடனடி ரவா தோசை செய்வது எப்படி?
சுவையான முட்டை மசாலா இடியாப்பம்