ஆரோக்கியமான மிளகு சூப்

மிளகு சூப் (MILAGROS SOUP)
தேவையானவை

துவரம் பருப்பு –           1/2 கப்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி –                      3
இஞ்சி –                           1 துண்டு
பூண்டு                           3 பல்
மஞ்சள் தூள் –             சிறிதளவு
எலுமிச்சை சாறு –     1 டீஸ்பூன்
தேங்காய் பால் –        1கப்
மல்லி தலை –            சிறிதளவு
உப்பு –                        தேவைக்கேற்ப
வெண்ணை  –           3 டீஸ்பூன்
பச்சை மிளகாய் –    1
தனியா –                    2 டீஸ்பூன்
சீரகம் –                     1 டீஸ்பூன்
சோம்பு –                  1/4 டீஸ்பூன்
மிளகு –                     1 1/2 (1.5) டீஸ்பூன்

செய்முறை

மிளகு சீரகம் சோம்பு தனியா ஆகியவற்றை வறுத்த பின்பு பொடி செய்து கொள்ளுங்கள். வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் பொடியாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும். வெண்ணையை கிடாயில் விட்டு நறுக்கி வைத்த இஞ்சி பூண்டு கலவையை வதக்கி கொள்ள வேண்டும்.

பின்பு அதனுடன் துவரம்பருப்பு வறுத்து அரைத்த பொடி கலவை 4-5 கப் தண்ணீர் சேர்த்து 2-3 விசில் (மசியும் வரை தேவைக்கேற்ப)வரும் வரை விடுங்கள். பின்பு அதில் ஒரு பச்சைமிளகாய் கீறியது தேங்காய் பால் உப்பு சேர்த்து ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வையுங்கள். கொதி வந்ததும் இறக்கி எலுமிச்சை சாறு மல்லித்தழை தூவி எடுத்து கொள்ளுங்கள். நமக்கு ஆரோக்கியமான மிளகுத் தண்ணீர் சூப் தயார்.

Amazon: Laptops Year end deals

வீட்டில் தக்காளி ஜாம் செய்யலாம்
சுவையான திணை அரிசி பாயசம்