சுவையான ஆப்பிள் பஜ்ஜி

சுவையான ஆப்பிள் பஜ்ஜி

ஆப்பிள் நம் எல்லோருக்கும் பிடித்தமான பழம், அதை தோலுடன் உண்பது தான் சிறந்தது. ஆப்பிளில் பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ளன. தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மருத்துவரிடம் செல்லத் தேவையில்லை என்று சொல்வார்கள். ஆப்பிள் என்றாலே சுவைதான், சுவைக்கு சுவை சேர்க்கும் வகையில் ஆப்பிளில் பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

Amazon: Laptops Year end deals

தேவையானவை

ஆப்பிள்              – 2
கடலை மாவு    – 150gm
மஞ்சள் தூள்    – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் (தேவைப்பட்டால்)
உப்பு                 – சுவைக்கு ஏற்ப
இஞ்சி               – ஒரு சிறு துண்டு
பூண்டு             – 3 பல்
எண்ணெய்    – தேவையான அளவு
பெருங்காயம் – தேவைப்பட்டால்

செய்முறை

முதலில் ஆப்பிளை நன்றாக கழுவி பஜ்ஜி போடுவதற்கு ஏற்றவாறு நறுக்கி கொள்ள வேண்டும். கடலை மாவுடன் நீர் சேர்த்து, அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு , அரைத்து வைத்துக் கொண்ட இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் பெருங்காயம் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கலக்கி வைத்து கொள்ளுங்கள்.

எண்ணெயை காய வைத்து, நறுக்கிய ஆப்பிள் துண்டுகளை மாவில் நனைத்து எண்ணெயில் போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும். சுவையான ஆப்பிள் பஜ்ஜி ரெடி, வீட்டில் செய்து சுவைத்து பார்க்க.

டேஸ்டான வாழைப்பழ சப்பாத்தி
ஈசியாக செய்யலாம் கறிவேப்பிலை கஞ்சி