ஆரோக்கியமான அவுல் கிச்சடி

அவுல் கிச்சடி

அவுல் இரும்புச் சத்து மிகுந்த உணவு ஆகும். இரும்புச் சத்து எல்லோருக்கும் தேவையானதாக இருக்கின்றது முக்கியமாக இரத்த சோகை உள்ளவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது. இதனை வைத்து சுவையாக ஒரு டிஷ் செய்யும் முறையை பார்ப்போம்.

தேவையானவை

அவுல் – 1 கப்
தேங்காய் பால் – 1.5 கப்
பெரிய வெங்காயம் – 2
தக்காளி சிறியது – 2 அல்லது 3
சீரகம் – 1டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
நிலக்கடலை – சிறிதளவு (கைப்பிடியில் பாதி)
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி தழை – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 6

Amazon: Laptops Year end deals

செய்முறை

முதலில் அவுலை 20 நிமிடங்கள் தேங்காய்ப்பாலில் ஊற வைக்க வேண்டும். வெங்காயம், தக்காளியை சிறியதாக நறுக்கி கொள்ள வேண்டும். நிலக்கடலை மற்றும் காய்ந்த மிளகாய் இரண்டையும் நன்றாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்த பிறகு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.

பின்னர் ஊறவைத்த அவுல் தேங்காய்ப்பால் சேர்த்து தேவையான அளவு உப்புடன் நன்றாக கிளற வேண்டும். சிறிது நேரம் கழித்து இறக்கும் பொழுது பொடி செய்த நிலக்கடலை, காய்ந்த மிளகாய் பொடியை தூவி கிளறவும். பின்னர் மல்லித்தழை, கறிவேப்பிலை தூவி பரிமாறவும். தற்போது ஆரோக்கியமான அவுல் கிச்சடி தயார்.

காலிஃப்ளவர் கேரட் கூட்டு
ஈசியாக செய்யலாம் கறிவேப்பிலை கஞ்சி