அப்பளம் வத்த குழம்பு

அப்பளம் வத்த குழம்பு
தேவையானவை

புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
மிளகாய் தூள் – 4 டீஸ்பூன்
பெருங்காயம் – தேவையான அளவு
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – சுவைக்கேற்ப
நல்லெண்ணெய் – 1/4 கப்
அப்பளம் – 4
கடுகு – 1/2 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன்
துவரம்பருப்பு – 2 டிஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 6
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் புளியை 2 டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து கொள்ளுங்கள். கிடாயில் எண்ணெய் ஊற்றி காய வைத்துக்கொள்ளுங்கள். காய்ந்த பின் கடுகு, வெந்தயம், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், சேர்த்து தாளித்து கொள்ளுங்கள்.

Purchase Laptops at Modest Price

இளம் பொன்னிறமாக மாறும் பொழுது, ஒடித்து வைத்துள்ள அப்பளத்தை இதனுடன் சேர்த்து குறைந்தது 1 நிமிடம் வறுத்துக்கொள்ளவும். பின் அதனுடன் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை சேருங்கள். அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு இறக்குங்கள். அப்பளம் வத்த குழம்பு தயார்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ப்ரெட் பாயசம் செய்யலாம்
சுவையான உருளைக்கிழங்கு அல்வா